முருகன் App
வையாபுரிப் பள்ளு
குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்
குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்33 / 49
1காப்புப்பாயிரம்2அவையடக்கம்3பள்ளிகள் வரவு4பழனிப்பள்ளி கலிப்பா5பள்ளன் வரவு6பள்ளன் தன் பெருமை கூறல்7பள்ளியர் குடித்தனங் கூறல்8பள்ளியர் நாட்டுவளங் கூறல்9குறியிற் கூக்கேட்டல்10மழைகவேண்டித் தெய்வம் பராவல்11வெறியயர்வேலன் நல்வர மளித்தல்12மழைக்குறி யோர்தல்13மழைகாலூன்றல்14வெள்ளம் வரவு15ஆற்றுச்சிறப்புக் காண்டல்16பண்ணைத் தலைவன் வரவு17மூத்தபள்ளி முறையீடு18இளையபள்ளி முறையீடு19பண்ணைத் தலைவன் இளைய பள்ளியை உரைப்பல்20பள்ளன் வெளிப்படல்21பண்ணைத் தலைவன் பண்ணைச்செயல் வினாவல்22பள்ளன் பண்ணைச்செயல் கூறல்23மாட்டுவகை24கலப்பை, மேழி, நுகம்25வயலெருவைக்க ஆயரை யழைத்தல்26ஆயர் வரவு27ஆயர் தம் பெருமை கூறல்28மூத்தபள்ளி சாடிகூறல்29பள்ளன் கிடைவைத்து வந்தான்போற் கூறல்30பள்ளனைத் தொழுவில் மாட்டல்31குட்டையிற் பள்ளனைக் கண்டுஇளையபள்ளி புலம்பல்32மூத்தபள்ளி பள்ளனுக்குச் சோறு கொண்டுவருதல்33குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்34குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்35பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.36பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்37நன்னாட்குறித்து நாளேரிடல்38காளைகளை ஏரிற்பூட்டல்39காளை வெருண்டது பள்ளத்துப் பாய்தல்40பள்ளிகள் புலம்பல்41பள்ளனெழுந்து வித்துழுது நாற்றுப்பாவுதல்42நாற்று நடல்43தொழி போடல், நாற்றுப்பறித்தல்44நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு45விளைந்தபின் செப்பஞ் செய்தல்46நெல் அளத்தல்47மூத்தபள்ளி முறையீடு48பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்49வாழ்த்தும் நூல் பயனும்
வையாபுரிப் பள்ளு · குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்

குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்

133கலிப்பா✓
தன்னைவழுத் திப்புகழ்ந்த தாசானு தாசனுக்கு
முன்னவனாய் நின்றெதையு முடிக்குஞ் சிவகிரியான்
செந்நெல்பண்ணைக் காரனுடன் சேதிசொல்லி மூத்தபள்ளி
அந்நிலையிற் பள்ளனைக்கண் டவள்சிரித்துச்
சொல்வாளே.
134சிந்து✓
இராகம்: யதுகுலகாம்போதி. அடதாளச்சாப்பு
மருந்துக் காரி மயக்கத்திற் சிக்கி
மதிம யங்கியே யென்னைக்கண் டப்போ(து)
எரிந்து வீழ்ந்துமே பேசின தெல்லாம்
இப்போ நீயனு பவிக்கிறாய் பள்ளா
வருந்தி நான்சொன்ன தையுங்கே ளாமல்
வட்டில் வைத்தபக் கம்வாய்வைத் தாயே
பொருந்துந் தன்வினை தன்னைச்சுற் றும்விதி
பொய்க்கா தேடாவை யாபுரிப் பள்ளா.
135✓
கள்ளத் தனமி ருந்தாலு முன்னையுங்
காட்டிக் கொடுத்துக் கடக்கநின்றாளே
கொள்ளீ கொண்டு தலைசொரிந் தாற்போற்
கொண்டா யேதென் பழனிப்பள் ளியைத்
துள்ளி னமாடு பொதிசுமக் குமென்று
சொன்னப டிக்குச் சிக்கிக்கொண் டாயே
பள்ளஞ் சேர்கொப்பத் தானைப்போற் குட்டையிற்
பட்டுக் கொண்டாய்வை யாபுரிப் பள்ளா.
136✓
மன்றி லினைய குடிகொண்ட பேர்க்கு
வரிசை யோவரு மோபள்ளா கேளாய்
துன்று முளிவாய் மூதேவி யாமெனச்
சொல்வர் நாழிவாய்ச் சீதேவி யாகிடு
மென்று சொன்ன பழமொழி பொய்யோவுன்
இளைய பள்ளியை மெச்சிக்கொண் டாயே
பன்றி யுடனே கூடின கன்றுபோற்
பழனிப் பள்ளியைக் கூடினாய் பள்ளா.
137✓
முட்டுண் டுகுனிந் தபிற கானாலும்
மோட்டுப் புத்தியை விட்டுக் கவரிமான்
கட்டுப் பட்டாற்போ லென்வார்த்தைக் குள்ளேநீ
கட்டுப் பட்டாலிக் காரியம் வருமோ
குட்டு மார்க்கத்தை விட்டுத்துன் மார்க்கங்
கொஞ்சத் தினங்கள் வருமாகை யாலே
சட்டம் விட்டம ரமனை யாரிடந்
தான்செல் லாதுவை யாபுரிப் பள்ளா.