முருகன் App
வையாபுரிப் பள்ளு
குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்
பள்ளியர் குடித்தனங் கூறல்7 / 49
1காப்புப்பாயிரம்2அவையடக்கம்3பள்ளிகள் வரவு4பழனிப்பள்ளி கலிப்பா5பள்ளன் வரவு6பள்ளன் தன் பெருமை கூறல்7பள்ளியர் குடித்தனங் கூறல்8பள்ளியர் நாட்டுவளங் கூறல்9குறியிற் கூக்கேட்டல்10மழைகவேண்டித் தெய்வம் பராவல்11வெறியயர்வேலன் நல்வர மளித்தல்12மழைக்குறி யோர்தல்13மழைகாலூன்றல்14வெள்ளம் வரவு15ஆற்றுச்சிறப்புக் காண்டல்16பண்ணைத் தலைவன் வரவு17மூத்தபள்ளி முறையீடு18இளையபள்ளி முறையீடு19பண்ணைத் தலைவன் இளைய பள்ளியை உரைப்பல்20பள்ளன் வெளிப்படல்21பண்ணைத் தலைவன் பண்ணைச்செயல் வினாவல்22பள்ளன் பண்ணைச்செயல் கூறல்23மாட்டுவகை24கலப்பை, மேழி, நுகம்25வயலெருவைக்க ஆயரை யழைத்தல்26ஆயர் வரவு27ஆயர் தம் பெருமை கூறல்28மூத்தபள்ளி சாடிகூறல்29பள்ளன் கிடைவைத்து வந்தான்போற் கூறல்30பள்ளனைத் தொழுவில் மாட்டல்31குட்டையிற் பள்ளனைக் கண்டுஇளையபள்ளி புலம்பல்32மூத்தபள்ளி பள்ளனுக்குச் சோறு கொண்டுவருதல்33குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்34குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்35பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.36பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்37நன்னாட்குறித்து நாளேரிடல்38காளைகளை ஏரிற்பூட்டல்39காளை வெருண்டது பள்ளத்துப் பாய்தல்40பள்ளிகள் புலம்பல்41பள்ளனெழுந்து வித்துழுது நாற்றுப்பாவுதல்42நாற்று நடல்43தொழி போடல், நாற்றுப்பறித்தல்44நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு45விளைந்தபின் செப்பஞ் செய்தல்46நெல் அளத்தல்47மூத்தபள்ளி முறையீடு48பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்49வாழ்த்தும் நூல் பயனும்
வையாபுரிப் பள்ளு · குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்

பள்ளியர் குடித்தனங் கூறல்

16கலிப்பா✓
பவ்வத் தரலினுக்கும் பருப்பதத்தி னிற்குமிடை
குவ்வித்த சூரர்கிளை குடிக்கும்வடி வேல்விடுத்தோன்
திவ்யபரஞ் சோதியெனுஞ் சிவகிரிவேள் தாள்போற்றிக்
கொவ்வையிதழ்ப் பள்ளியர்தங்குடித்தனங்கள்கூறுவரே.
17மூத்தபள்ளி✓
தரு
இராகம்: நாதநாமக்கிரியை. ஆதி தாளம்
காசியிம்மா சேதுமட்டும்
தேசப்பிரக் கியாதியான
கன்னன்வி சையகிரிச்
சின்னோவய்யன்
ராசனெங்க ளதுபிர
யாசையத றிந்த்துரை
நாட்டினிற்பள் ளருக்குளே
மேட்டிமைபெற்றோம்
நேசித்துத்த லத்திற்பிர
காசமாஞ்சி வகிரியும்
நிலைத்திடுமந் நாளிலிந்தத்
தலத்தில்வந்தோம்
வாசனன்சி வகிரியுல்
லாசனுக்க டிமையான
வையாபுரிப் பள்ளியும்
நானேயாண்டே.
18✓
அன்றென்னையு முரிமைப்பெண்
என்றஞ்சுவ யதினிலே
அருப்பம்வ ராதமுன்பு
மறித்துக்கொண்டான்
நின்றவன்கா லாற்சொன்னது
நன்றென்றுநை யாற்செய்குவே
னென்னைத்தள்ளி நில்லென்று
முன்னேசொல்லான்
மன்றல்வாழ்க் கைப்பட்டநாள்
அன்றுதொடுத் துப்பள்ளன்
மனையிற்பால் பொங்கினாற்போல்
தனமுமாச்சு
வென்றிவ ராககிரிக்
குன்றுமேல் விளக்குப்போல்
விளங்குங்கு லத்தில்வந்து
வளர்ந்தேனாண்டே.
19இளைய பள்ளி✓
செல்லமா கவளர்ந்த
நல்லபெண் வேணுமென்று
தேடிப்பார்த் தென்னைக்கட்டிக்
கூடிக்கொண்டான்
நல்லவ ளென்றுநானும்
எல்லோர்க்கும் பேரெடுத்து
நாத்திமார் நங்கைமாரை
வாழ்த்திக்கொள்வேன்
பொல்லாத வளென்றுதான்
சொல்லாத தைச்சொல்லிப்
புருசன்வை தடித்தாலும்
வரிசைவிடேன்
தில்லையத்துக் காட்டாளி
யல்லவேயொ ருவர்போலத்
தென்பழனிப் பள்ளியும்
நானேயாண்டே.