முருகன் App
வையாபுரிப் பள்ளு
குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்
நெல் அளத்தல்46 / 49
1காப்புப்பாயிரம்2அவையடக்கம்3பள்ளிகள் வரவு4பழனிப்பள்ளி கலிப்பா5பள்ளன் வரவு6பள்ளன் தன் பெருமை கூறல்7பள்ளியர் குடித்தனங் கூறல்8பள்ளியர் நாட்டுவளங் கூறல்9குறியிற் கூக்கேட்டல்10மழைகவேண்டித் தெய்வம் பராவல்11வெறியயர்வேலன் நல்வர மளித்தல்12மழைக்குறி யோர்தல்13மழைகாலூன்றல்14வெள்ளம் வரவு15ஆற்றுச்சிறப்புக் காண்டல்16பண்ணைத் தலைவன் வரவு17மூத்தபள்ளி முறையீடு18இளையபள்ளி முறையீடு19பண்ணைத் தலைவன் இளைய பள்ளியை உரைப்பல்20பள்ளன் வெளிப்படல்21பண்ணைத் தலைவன் பண்ணைச்செயல் வினாவல்22பள்ளன் பண்ணைச்செயல் கூறல்23மாட்டுவகை24கலப்பை, மேழி, நுகம்25வயலெருவைக்க ஆயரை யழைத்தல்26ஆயர் வரவு27ஆயர் தம் பெருமை கூறல்28மூத்தபள்ளி சாடிகூறல்29பள்ளன் கிடைவைத்து வந்தான்போற் கூறல்30பள்ளனைத் தொழுவில் மாட்டல்31குட்டையிற் பள்ளனைக் கண்டுஇளையபள்ளி புலம்பல்32மூத்தபள்ளி பள்ளனுக்குச் சோறு கொண்டுவருதல்33குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்34குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்35பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.36பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்37நன்னாட்குறித்து நாளேரிடல்38காளைகளை ஏரிற்பூட்டல்39காளை வெருண்டது பள்ளத்துப் பாய்தல்40பள்ளிகள் புலம்பல்41பள்ளனெழுந்து வித்துழுது நாற்றுப்பாவுதல்42நாற்று நடல்43தொழி போடல், நாற்றுப்பறித்தல்44நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு45விளைந்தபின் செப்பஞ் செய்தல்46நெல் அளத்தல்47மூத்தபள்ளி முறையீடு48பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்49வாழ்த்தும் நூல் பயனும்
வையாபுரிப் பள்ளு · குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்

நெல் அளத்தல்

197கலிப்பா✓
வெள்ளையா னைப்பதவி வேண்டிப் பணியவருள்
வள்ளல் சிவகிரியில் வாழும்வடி வேலர்பண்ணைப்
பள்ளனுமே நெல்லதனைப் பாங்கா யளவுகண்டு
விள்ளுவான் பண்ணை விசாரிப்பான் றன்முன்னே.
198சிந்து✓
இராகம்: நாதநாமக்கிரியை. சம்பை தாளம்
முருக்கடியின் சம்பாநெல்லில்
முந்நூறு சலகை
சுருக்காக வேயளந்து
சுப்பிரம ணியற்கீந்தேன்
பருக்கடிநி லத்துநல்லைப்
பாவலருக் கீந்தேன்
கருக்காய்நெல் லத்தனையும்
கடைச்செல வுக்கீந்தேன்.
199✓
அனகன் விசையகிரி
வேலச்சின் னோவன்பூசைக்
கனகச பாபதிக்குமம்
பதுசல கையீந்தேன்
கனகன்கண்ணப் பன்பூசித்த
காளத்தியீச் சுரனுக்கு
மனதுடனம் பதுசலகை
வகையுட னேயீந்தேன்.
200✓
திருவாவடு துறையார்பூசை
செய்திடுஞ்ச பாபதிக்கும்
வருமகேசுர ரர்பூசைக்கும்
வாகனம டந்தனக்கும்
நொருப்பின்றிப் பெருவள்ளத்தில்
நூற்றிருப துசலகை
கருத்துடனே யளந்துவிட்டேன்
கணக்குப்ப டிக்குத்தானே.
201✓
பாலய்யர்ம டந்தனக்குப்
பனையடிநி லத்துநெல்லிற்
காலிங்கரா யன்நெல்லில்
கணக்குப்பார்த்தெண் பதுசலகை
சோலிசொல்லா மற்பொதியைச்
சுட்டிக்கையா கப்பிடித்தே
ஆலயத்துக் கனுப்பினாற்போல்
அனுப்பிவைத் தேன்காணாண்டே.
202✓
ஆலடிநி லத்துநெல்லில்
ஐஞ்ஞூறுச லகைநெல்
கோலஞ்சேருந் தவரரச
பண்டிதருக் கீந்தேன்
வேலடிநி லத்துநெல்லை
விளங்குபாணி பத்திரற்குச்
சோலிசொல்லா மலளந்து
சூட்டிக்கையா கக்கொடுத்தேன்.
203✓
கமுகடியின் நெல்லைப்பச்சைக்
கந்தபைய னுக்கீந்தேன்
சமுகவித்து வான்களுக்குச்
சலகையஞ் ஞூறீந்தேன்
…………………….
…………………….
…………………….
…………………….
204✓
புகழுநல்லய் யங்காருக்குப்
பூசைப்பொட்டிச் சம்பாவில்
மிகவேயைம் பதுசலகை
விருப்பமு டன்கொடுத்தேன்
…………………….
…………………….
…………………….
…………………….
205✓
வேயடியி னெல்லையெல்லாம்
வேதியருக் கீந்தேன்
கோயிலுக்குங் குளம்வெட்டுக்குங்
குழைபோட்ட பள்ளியர்க்கும்
…………………….
…………………….
தாயகமா யைஞ்ஞூறு
சலகைநெல் லயளந்தேன்.
206✓
சத்திரத்துக் கெண்ணூறு
சலகைநெல் லளந்தேன்
…………………….
…………………….
…………………….
…………………….
…………………….
…………………….
207✓
மற்றநெல்லின் செலவையெல்லாம்
வகைதொகை விவரமாகக்
கற்றுணர்ந்த நம்மள்பண்ணைக்
கணக்குப்பிள் ளையெழுதி
முற்றும்வகை தொகைகண்டு
முறையாயெ ழுதிச்சுருள்
சுற்றிவைத்துக் கொண்டானந்தத்
தொகைகாணுங் காணாண்டே.