முருகன் App
வையாபுரிப் பள்ளு
குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்
பள்ளியர் நாட்டுவளங் கூறல்8 / 49
1காப்புப்பாயிரம்2அவையடக்கம்3பள்ளிகள் வரவு4பழனிப்பள்ளி கலிப்பா5பள்ளன் வரவு6பள்ளன் தன் பெருமை கூறல்7பள்ளியர் குடித்தனங் கூறல்8பள்ளியர் நாட்டுவளங் கூறல்9குறியிற் கூக்கேட்டல்10மழைகவேண்டித் தெய்வம் பராவல்11வெறியயர்வேலன் நல்வர மளித்தல்12மழைக்குறி யோர்தல்13மழைகாலூன்றல்14வெள்ளம் வரவு15ஆற்றுச்சிறப்புக் காண்டல்16பண்ணைத் தலைவன் வரவு17மூத்தபள்ளி முறையீடு18இளையபள்ளி முறையீடு19பண்ணைத் தலைவன் இளைய பள்ளியை உரைப்பல்20பள்ளன் வெளிப்படல்21பண்ணைத் தலைவன் பண்ணைச்செயல் வினாவல்22பள்ளன் பண்ணைச்செயல் கூறல்23மாட்டுவகை24கலப்பை, மேழி, நுகம்25வயலெருவைக்க ஆயரை யழைத்தல்26ஆயர் வரவு27ஆயர் தம் பெருமை கூறல்28மூத்தபள்ளி சாடிகூறல்29பள்ளன் கிடைவைத்து வந்தான்போற் கூறல்30பள்ளனைத் தொழுவில் மாட்டல்31குட்டையிற் பள்ளனைக் கண்டுஇளையபள்ளி புலம்பல்32மூத்தபள்ளி பள்ளனுக்குச் சோறு கொண்டுவருதல்33குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்34குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்35பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.36பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்37நன்னாட்குறித்து நாளேரிடல்38காளைகளை ஏரிற்பூட்டல்39காளை வெருண்டது பள்ளத்துப் பாய்தல்40பள்ளிகள் புலம்பல்41பள்ளனெழுந்து வித்துழுது நாற்றுப்பாவுதல்42நாற்று நடல்43தொழி போடல், நாற்றுப்பறித்தல்44நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு45விளைந்தபின் செப்பஞ் செய்தல்46நெல் அளத்தல்47மூத்தபள்ளி முறையீடு48பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்49வாழ்த்தும் நூல் பயனும்
வையாபுரிப் பள்ளு · குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்

பள்ளியர் நாட்டுவளங் கூறல்

20கலிப்பா✓
கோட்டுவள மெல்லாங் குயில்வளமும் வண்டினத்துப்
பாட்டுவளங் கூட்டிநிற்கும் பரப்புவளம் பூத்தமலர்க்
காட்டுவள மருதவளங் காவலவை யாபுரிநல்
நாட்டுவளந் தன்னையொரு நாவளத்தாற் கூறுவரே.
21மூத்தபள்ளி✓
சிந்து
இராகம்: யதுகுலகாம்போதி. அடதாளச் சாப்பு
புன்னை யேறிமந் திதென்னை பாயும்
புனமெ லாமுருக னடிமலர் தோயும்
அன்ன மொன்றுக்கொன் றூடலாற் காயும்
அனங்கன் சாத்திரத் தைக்கிள்ளை யாயும்
மின்னுந் தேனிறாற் சுமந்தந்த வேயும்
வெளிறு பாதிரிச் சோலையிற் சாயும்
மன்னுங் கற்பக நாடெங்குஞ் சூழ்ந்த
வளர்வை யாபுரி நாடெங்கள் நாடே.
22இளையபள்ளி✓
சிந்து
மாமரம் வெய்யோன் தேரைத் தடுக்கும்
மந்தி வண்டுக்குக் கனியைக் கொடுக்கும்
பூமியி லிந்திர கோபம் படுக்கும்
புயல்கண்டு சிங்கம் வாலை யொடுக்கும்
தாமரை முத்தை யன்ன மெடுக்கும்
தன்முட்டை யென்று சிறகி லொடுக்கும்
தேமலர் வாவி கூவநி றைந்த
சிறந்த தென்பழனி யூயரெங்க ளூரே.
23மூத்தபள்ளி✓
சிந்து
தாதவிழ் சந்த்ர காந்தி நிலாவும்
சாளர வாயி லெங்கு முலாவும்
கோதி லாமேடை யைமுகில் தாவும்
கொடித்துசம் பானு குதிரைமெய் நீவு
மாதி யாஞ்சோலை யிற்குயில் கூவு
மதின்மீ திற்காவி மலரையுந் தூவும்
மாத விமரு தாவள மோங்கிய
வளர்வை யாபுரி நாடெங்கள் நாடே.
24இளைய பள்ளி✓
சிந்து
தண்டா மரையிற் சேர்ந்தன்னப் பேடு
சருவிக் கிரீடிக்கத் துணையன்னந் தேடும்
வண்டி னங்களுங் கீதங்கள் பாடும்
மந்தி கள்சத்த தாளங்கள் போடும்
அண்டி யேகரடி தித்தியைக் கூடும்
அதுகண் டுமஞ்ஞை பூங்கொப்பி லாடும்
தெண்டா யுதக்கை வேல்முரு கையன்
சிறந்த தென்பழனி யூரெங்க ளூரே.
25மூத்த பள்ளி✓
சிந்து
அடிக்கக் கண்டது சூடு சுருணை
அதிரக் கண்டது பேரிகைச் சத்தம்
பிடிக்கக் கண்டதி ருகடர்க் கிரகணம்
பிரியக் கண்டது கருப்பம்பா கெண்ணெய்
தடிக்கக் கண்டது பேதையர் கொங்கை
தனிப்பக் கண்டது யோகிய ருள்ளம்
வடிக்கக் கண்டது பூமலர் தேன்கள்
வளர்வை யாபுரி நாடெங்கள் நாடே.
26இளைய பள்ளி✓
சிந்து
கதறக் கண்டது பெண்கள்சி லம்பு
கலங்கக் கண்டது வெண்டயிர்க் கண்டம்
விதுரக் கண்டது காக்கைக்கு யிற்குஞ்சு
வெடிக்கக் கண்டது சரமல்லிக் காய்கள்
பதறக் கண்டது மதனவேள் பாணி
பறக்கக் கண்டது பட்சிக் குலங்கள்
சிதறக் கண்டது பூஞ்சோலைப் புட்பம்
சிறந்த தென்பழனி யூரெங்க ளூரே.
27மூத்தபள்ளி✓
சிந்து
மெச்சு றாலைக்கன் னல்முத்தந் தெறிக்கும்
வேழம் பெண்க ளபயம் பறிக்கும்
செச்சை யில்பெண்கள் முகநிலா வெரிக்கும்
செவ்வி மாமுக மலர்ந்ததைப் பரிக்கும்
அச்சு வத்தமும் விதுவை மறிக்கும்
அருங்கு யிலுமாந் தளிரைக்கத் தரிக்கும்
மச்சு மாடக் டகோபு ரங்கள்சூழ்
வளர்வை யாபுரி நாடெங்கள் நாடே.
28இளையபள்ளி✓
சிந்து
குடவ ளைக்குல மின்மணி கொழிக்கும்
குஞ்சு மீனெதிர் பாலுண்டு களிக்கு
முடனை யேயதைக் கண்டாமை பழிக்கு
முரம்பெல் லாமுந்தேன் பாய்ந்துதத் தளிக்கு
மடைவா யின்மச்சம் பாய்ந்துக ளிக்கும்
மந்திக் குட்டிகள் நண்டைக்கண் டொளிக்கும்
திடவே திகையில் மும்முர சொலிக்கும்
சிறந்த தென்பழனி யூரெங்க ளூரே.