முருகன் App
வையாபுரிப் பள்ளு
குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்
மூத்தபள்ளி சாடிகூறல்28 / 49
1காப்புப்பாயிரம்2அவையடக்கம்3பள்ளிகள் வரவு4பழனிப்பள்ளி கலிப்பா5பள்ளன் வரவு6பள்ளன் தன் பெருமை கூறல்7பள்ளியர் குடித்தனங் கூறல்8பள்ளியர் நாட்டுவளங் கூறல்9குறியிற் கூக்கேட்டல்10மழைகவேண்டித் தெய்வம் பராவல்11வெறியயர்வேலன் நல்வர மளித்தல்12மழைக்குறி யோர்தல்13மழைகாலூன்றல்14வெள்ளம் வரவு15ஆற்றுச்சிறப்புக் காண்டல்16பண்ணைத் தலைவன் வரவு17மூத்தபள்ளி முறையீடு18இளையபள்ளி முறையீடு19பண்ணைத் தலைவன் இளைய பள்ளியை உரைப்பல்20பள்ளன் வெளிப்படல்21பண்ணைத் தலைவன் பண்ணைச்செயல் வினாவல்22பள்ளன் பண்ணைச்செயல் கூறல்23மாட்டுவகை24கலப்பை, மேழி, நுகம்25வயலெருவைக்க ஆயரை யழைத்தல்26ஆயர் வரவு27ஆயர் தம் பெருமை கூறல்28மூத்தபள்ளி சாடிகூறல்29பள்ளன் கிடைவைத்து வந்தான்போற் கூறல்30பள்ளனைத் தொழுவில் மாட்டல்31குட்டையிற் பள்ளனைக் கண்டுஇளையபள்ளி புலம்பல்32மூத்தபள்ளி பள்ளனுக்குச் சோறு கொண்டுவருதல்33குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்34குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்35பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.36பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்37நன்னாட்குறித்து நாளேரிடல்38காளைகளை ஏரிற்பூட்டல்39காளை வெருண்டது பள்ளத்துப் பாய்தல்40பள்ளிகள் புலம்பல்41பள்ளனெழுந்து வித்துழுது நாற்றுப்பாவுதல்42நாற்று நடல்43தொழி போடல், நாற்றுப்பறித்தல்44நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு45விளைந்தபின் செப்பஞ் செய்தல்46நெல் அளத்தல்47மூத்தபள்ளி முறையீடு48பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்49வாழ்த்தும் நூல் பயனும்
வையாபுரிப் பள்ளு · குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்

மூத்தபள்ளி சாடிகூறல்

117கலிப்பா✓
இடையரெல்லாம் வயலதுக்கு ளேகியபின் பள்ளன் மெள்ள
அடைவுடனே யிளையபள்ளி யாள்வீட்டுக் கிடையானான்
கடைவிழியாள் மூத்தபள்ளி கண்டுபண்ணைக் காரன்முன்பு
வெடுவெடெனப் பள்ளனையும் வெகுண்டுமுறை
யிட்டனளே.
118சிந்து✓
இராகம்: புன்னாகவராளி. ஆதிதாளம்
அச்சத்தை விடுத்தான்—இளையவள்
குச்சிற்றோய்ப் படுத்தான்—நானும்போய்
அழைத்தாலும் வாரான்—வயல்விரை
முளைத்தாலும் பாரான்.
கச்சைக்காய்ப் பள்ளன்—அவன்வெகு
குச்சிரக் கள்ளன்—வேலைக்குக்
கழுப்பிணி செய்வான்—நானும்போய்
எழுப்பினால் வைவான்
பிச்சனை வெல்வான்—எனக்கொரு
ஒச்சமுஞ் சொல்வான்—அவன்காலைப்
பிடித்தாற்கை நெரிப்பான்—இளையவள்
அடித்தாலுஞ் சிரிப்பான்
கச்சையுங் கட்டான்—வரவர
லச்சையும் விட்டான்—அடியாள்
கண்டதைச்சொன்னேன்—அவன்வெகு
வண்டன்கா ணாண்டே.
119✓
சத்தியத்துக் கதிரான்—இளையவள்
உத்தரவுக் கெதிரான்—குலுகைத்
தவசத்தை விற்றான்—ஒருகாசுக்
கவகாச மற்றான்
ஒத்தவன் வாழுான்—நான்சொலும்
புத்தியுங் கேளான்—தயிரையும்
ஊத்தினா லடிப்பான்—இளையவள்
வார்த்ததைக் குடிப்பான்
தித்திக்கு மாவாள்—அடிக்குமத்த
ளத்துக்கு மாவாள்—பணமெல்லாஞ்
சிந்தியே கெட்டான்—எனையிப்போ
சந்தியில் விட்டான்
மெத்தக்கட் குடிப்பான்—அவள்காலை
நித்தம்போய்ப் பிடிப்பான்—பள்ளனை
விடியுங்காட் டியிலே—குட்டையில்
அடியுங்கா ணாண்டே.
120✓
என்கையிற் சோறுங்—கசந்தவள்
தன்கையிற் சாறும்—இனிக்கு(து)
என்றவன் போனான்—அவள்முலைக்
குன்றுக்கு ளானான்
தன்னையு மறந்தான்—வெகுநாளாய்
என்னையுந் துறந்தான்—என்வீட்டிற்
சளத்துக்குப் படுப்பான்—அவளுடன்
களத்திலும் படுப்பான்
பொன்னியைத் தொடர்ந்தான்—இல்லைவிட்(டு)
என்னையுங் கடந்தான்—எருமைப்
போத்துக்கு மிசைவான்—கோமாளிக்
கூத்துக்கு மிசைவான்
என்னையுங் குறியீர்—நான்சொன்ன
சன்னையு மறியீர்—பள்ளனை
ஈடுபட் டிடவே—குட்டையிற்
போடுவீ ராண்டே
121✓
வெட்டிக்குப் பேட்டை—நல்லண்ணச்
செட்டிக்கு மாட்டைப்—பதினெட்டு
வெள்ளைக்குக் கொடுத்தான்—கொழுந்தியாள்
பிள்ளைக்கிட் டெடுத்தான்
தெட்டியே விட்டான்—எனக்கிப்போ
ஒட்டிப்புண் விட்டான்—தன்னுடை
தேட்டையு மொழித்தான்—கோவலன்
பாட்டுக்கு மழித்தான்
வட்டவீ டெடுத்தான்—பணமெல்லாம்
கொட்டியே கொடுத்தான்—தன்வெகு
மானத்துக் கவளாம்—படுந்துயர்
ஈனத்துக் கிவளாம்
கிட்டத்திற் படுக்கான்—அவள்சேலை
கட்டிக்கக் கொடுக்கான்—என்னையுங்
கேலியுஞ் செய்வான்—அவனுமாய்
மாலன்கா ணாண்டே.
122✓
பாணான்கைச் சுள்ளும்—ஈழுவச்
சாணான்கைக் கள்ளும்—கொண்டெட்டுப்
பசுவையும் விற்றான்—அவன்மனக்
கசிவையு மற்றான்
பூணிக்கை யாலே—யவளுக்குக்
காணிக்கை போலே—பணமிட்டுப்
புடவையு மெடுத்தான்—திரும்பவும்
உடமையுங் கொடுத்தான்
ஏணிக்கு நேரான்—ஒன்றையும்
பாணித்துப் பாரான்—அவனுமென்
இளமையைப் பறித்தான்—அவளுடை
வளமையைக் குறித்தான்
ஊணுக்குக் கெட்டி—பள்ளனும்
ஆணுக்குள் மட்டி—பள்ளனை
ஊட்டத்து மயில்போற்—குட்டையிற்
போட்டுக்கொ ளாண்டே.
123✓
பூராயத் துடனே—வாங்கின
சாராயக் கடனும்—அவனுடை
புழைப்பிலே மிச்சம்—எனக்கிப்போ
நுழைப்பது மச்சம்
பேராகப் பிழைத்து—வீணிலே
ஊராருக் குழைத்துத்—தேடியே
பேய்த்தண்ணீர்க் கிறைத்தான்—அவகப்பன்
கீர்த்தியை மறைத்தான்
தோராய மென்னக்—கொழுந்தியாள்
மாராயஞ் சொன்ன—வண்ணான்
சுவந்திர மென்றெ—அஞ்சுபொன்
செவலைச்செங் கன்றைப்
பாராட்டிட் கொடுத்தான்—அவள்வீட்டிற்
சீராட்டிப் படுத்தான்—நீரேபோய்ப்
பார்த்திப்போ பிடித்துக்—குட்டையிற்
சேர்த்துங்கா ணாண்டே.