முருகன் App
வையாபுரிப் பள்ளு
குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்
மூத்தபள்ளி முறையீடு47 / 49
1காப்புப்பாயிரம்2அவையடக்கம்3பள்ளிகள் வரவு4பழனிப்பள்ளி கலிப்பா5பள்ளன் வரவு6பள்ளன் தன் பெருமை கூறல்7பள்ளியர் குடித்தனங் கூறல்8பள்ளியர் நாட்டுவளங் கூறல்9குறியிற் கூக்கேட்டல்10மழைகவேண்டித் தெய்வம் பராவல்11வெறியயர்வேலன் நல்வர மளித்தல்12மழைக்குறி யோர்தல்13மழைகாலூன்றல்14வெள்ளம் வரவு15ஆற்றுச்சிறப்புக் காண்டல்16பண்ணைத் தலைவன் வரவு17மூத்தபள்ளி முறையீடு18இளையபள்ளி முறையீடு19பண்ணைத் தலைவன் இளைய பள்ளியை உரைப்பல்20பள்ளன் வெளிப்படல்21பண்ணைத் தலைவன் பண்ணைச்செயல் வினாவல்22பள்ளன் பண்ணைச்செயல் கூறல்23மாட்டுவகை24கலப்பை, மேழி, நுகம்25வயலெருவைக்க ஆயரை யழைத்தல்26ஆயர் வரவு27ஆயர் தம் பெருமை கூறல்28மூத்தபள்ளி சாடிகூறல்29பள்ளன் கிடைவைத்து வந்தான்போற் கூறல்30பள்ளனைத் தொழுவில் மாட்டல்31குட்டையிற் பள்ளனைக் கண்டுஇளையபள்ளி புலம்பல்32மூத்தபள்ளி பள்ளனுக்குச் சோறு கொண்டுவருதல்33குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்34குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்35பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.36பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்37நன்னாட்குறித்து நாளேரிடல்38காளைகளை ஏரிற்பூட்டல்39காளை வெருண்டது பள்ளத்துப் பாய்தல்40பள்ளிகள் புலம்பல்41பள்ளனெழுந்து வித்துழுது நாற்றுப்பாவுதல்42நாற்று நடல்43தொழி போடல், நாற்றுப்பறித்தல்44நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு45விளைந்தபின் செப்பஞ் செய்தல்46நெல் அளத்தல்47மூத்தபள்ளி முறையீடு48பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்49வாழ்த்தும் நூல் பயனும்
வையாபுரிப் பள்ளு · குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்

மூத்தபள்ளி முறையீடு

208கலிப்பா✓
எல்லா வகைதொகையு மெடுத்துரைத்து மென்கணக்கைச்
சொல்லாமல் விட்டபள்ளன் சூதையினிக் கேளுமென்றே
வல்லாளன் வேலவன்வை யாபுரிப்பள் ளிகோவம்
நில்லாமற் பள்ளியர்முன் னிட்டூரஞ் சொல்வாளே.
209சிந்து✓
இராகம்: கும்பகாம்போதி. ஆதி தாளம்
சட்டித் தலைப் பண்ணை யாண்டார்
நடுக்கேளாரோ—வளைத்
தடிக்காலுப் பண்ணையாண்டார்
நடுக்கேளாரோ
மொட்டை மீசைப் பண்ணை யாண்டார்
நடுக்கேளாரோ—வாந்தை
முளிமூக்குப் பண்ணையாண்டார்
நடுக்கேளாரோ
வெட்டிச் சோலைப் பண்ணை யாண்டார்
நடுக்கேளாரோ—எங்கள்
வேலவனார் பண்ணையாண்டார்
நடுக்கேளாரோ
பொட்டி மகன் என்னுடைய
பள்ளன்செய்த—இந்தப்
புழுதிமாயங் கேளுங்கடி
பள்ளியீரே.
210✓
இந்தப் பாடு பட்டுமுன்றும்
பள்ளனுக்குப்—புத்தி
யின்னம்வர வில்லையது
என்னவிதியோ
அந்தச் சின்னச் சிறுக்கிதென்
பழனிப் பள்ளி—மேலே
ஆசையின்ன மலைக்குது
ரோசமில்லையே
முந்தா நாள் வள்முன்பாக
வென்னையும்வைதான்—நின்ற
முறைநெல்லும் பிள்ளையார்
அடிநெல்லையும்
சொந்த மென்றே வாரியவள்
கூடையிலிட்டான்—என்றன்
சுவந்த்ர நெற்கொடுக்கக்
கைநடுங்குதே.
211✓
அரிமி தித்து வைத்தநெல்லும்
பண்ணைக்காரனை—இப்போ
அலட்டிப்பேய்த் தண்ணீருக்கு
வாங்கின நெல்லும்
சரிச ரியாப் பங்கியவ
ளுக்குக்கொடுத்தான்—பேர்க்குத்
தந்தோமென்று கல்கரம்பை
கூட்டிக் கொடுத்தான்
பெருமைக்கி யாடடித்துப்
பிள்ளைகையிலே—இப்போ
பின்னையொன்று சுட்டுத் தந்த
பேர்களைப் போலே
புரிந்தா னிந்த நெல்லை நீங்கள்
எல்லோம்பாரும்—இந்தப்
புதுமைநீங்கள் கண்ட துண்டோ
பள்ளியீரே.
ஏசல்✓
பழனிப் பள்ளி:
புரணி சொன்ன தென்னடிவை
யாபுரிப்பள்ளி—அடி
போடி முண்டை முறையிட்டுத்
திரிந்தாவதென்ன;
212வையாபுரிப் பள்ளி:✓
மரியா தையாய்ப் பேசடிதென்
பழனிப்பள்ளி—யந்த
மந்தி ரத்தில் மாங்காய்விழு
காதடிபோடி.
பழனிப் பள்ளி:✓
மூத லிச்சுப் பள்ளனையுங்
கேலிசெய்யுறாய்—அடி
மூப்புச்சொம் மெனக்குத் தந்தால்
மூதலியோடி;
213வையாபுரிப் பள்ளி:✓
தோத கத்தி னங்கள்வேண்டாம்
குடும்பனுக்கு—நீயும்
சொந்த மோவென் னிலும்பார்க்கச்
சும்மாயிரடி.
பழனிப் பள்ளி:✓
இருக்காமல் நானு மிப்போ
எழுந்துவந்தேனோ—நானும்
ஏழுவழக் கேறி யுன்னைப்
போலேவந்தேனோ;
214வையாபுரிப் பள்ளி:✓
ஒருத்தி யோடே புருசனுக்கு
ஆசைப்பட்டுநான்—இப்போ
ஓடிவந்த தெல்லா மிந்த
வுலகமறியும்.
பழனிப் பள்ளி:✓
குருர மாகப் புருசன்மேலே
சாடியைச்சொல்லி—இப்போ
குட்டையடித் திட்டதுநா
னல்லடிபோடி.
215வையாபுரிப் பள்ளி:✓
பிரீதி யாய்ப்பண் ணையக்கண்டு
பள்ளனைத்தானே—கட்டிப்
பேசிவிடு வித்தவள்நீ
யல்லடிபோடி.
பழனிப் பள்ளி:✓
போடி வாடி யென்றுமிஞ்சிப்
பேசுஞ்சலிகை—அந்தப்
புதுப்பண்ணைக் காரனார்ச
லிகையல்லவோ;
216வையாபுரிப் பள்ளி:✓
வாடி யிந்தச் சேதியெல்லாம்
பண்ணைக்காரனார்—மட்டும்
வழக்கேறா விட்டாலுன்றன்
வாயுமடங்கா.
பழனிப்:✓
அடங்கா மலே னானாளெரி
மல்லியேயென்றே—என்னை
யனைவோரு மறிவார்வை
யாபுரிப்பள்ளி;
217வையாபுரிப்:✓
உடம்பு தான்தெ ரியாமலே
பேசுறாயடி—பள்ளன்
உன்னையென்ன யெண்ணாமலே
பேசச்சொன்னானோ.
பழனிப்:✓
சொல்வ தென்ன சூடுபா(டு)
எனக்கில்லையோ—யிந்தச்
சொட்டைச்சொல்லுக் காட்டாளிநா
னல்லடிபோடி;
218வையாபுரிப்:✓
வல்ல மையாய்ப் பேசாதெதென்
பழனிப்பள்ளி—யார்
வல்லமையா ருக்குச்சத
மாகிநின்றது.
பழனிப்:✓
நின்றப் பாலே பேசடியெச்
சில்தெரிக்குது—பள்ளன்
நின்றா ல்லவ வோவுன்சேதி
யெல்லாந்தெரியும்;
219வையாபுரிப்:✓
கன்று பன்றி யுடன்கூடிக்
கொண்டாற்போலவே—யுன்னைக்
கண்டாசைப்பட் டுக்கொண்ட
பள்ளன்கெட்டாண்டி.
பழனிப்:✓
கெட்ட பேச்சைப் பேசவேண்டாம்
உனக்குத்தானே—என்ன
கெடுமதி கண்ணுக்குத்தோற்
றாமற்பேசுறாய்;
220வையாபுரிப்:✓
கட்டு மாச்சே யுனக்கேற்ற
காலமுமாச்சே—யென்னைக்
கண்டுவந்த சிறுக்கிக்கு
மித்தலையாச்சே.
பழனிப்:✓
சிறுக்கி யென்று சொல்லாதடி
சீயென்னப்போறேன்—எங்குஞ்
செல்லுங்கா சுக்குவட்ட
முண்டோசொல்லடி;
221வையாபுரிப்:✓
உறுக்கிப் பேசுத் துள்ளாதடி
புலியின்முன்னே—இப்போ
ஊஞ்சலாட வாராயது
ஞாயமல்லடி.
பழனிப்:✓
முலையை யாட்டி வெட்கமில்லா
மலேபேசுறாய்—அடி
மூக்குப் போன குதிரை துவா
ரத்துக்கஞ்சாதே;
222வையாபுரிப்:✓
குலமான பள்ளி யென்றே
உன்னைக்கொண்டு—வைத்த
குருக்கள்தலை யிலேகொட்டுப்
போடவாராயே.
பழனிப்:✓
உன்னைக் கண்டு வந்தேனோவை
யாபுரிப்பள்ளி—இப்போ
உழக்குக்குள்ளே கிழக்குமேற்குச்
சொல்லுறாயடி;
223வையாபுரிப்:✓
என்னைக் கண்டு வந்ததிந்த
நாடறியாதோ—நீயும்
இனிமேலென்ன வெண்ணைக்கோழி
கூவிக்கொள்ளுறாய்.
பழனிப்:✓
கொஞ்சப் பேச்சென் னிடத்திலே
நடவாதடி—இப்போ
கொல்லத்தெரு விலேயூசி
மாறுறாய்போடி;
224வையாபுரிப்:✓
மிஞ்சி வாய்மீ றவேவேண்டாம்
பள்ளனுக்கு—வந்த
விதிவரப் போகுதடி
வாயடங்கடி.
பழனிப்:✓
கடுக டுத்துக் கொள்வதென்வை
யாபுரிப்பள்ளி—பனங்
காட்டுநரி சலசலப்புக்
கஞ்சமோபோடி;
225வையாபுரிப்:✓
கொடுமை பண்ணி மானமொரு
சாணாய்நிற்கிறாய்—இப்போ
குண்டுசட்டி யிற்குதிரை
யோட்டுறாய்போடி.
பழனிப்:✓
சரிச ரியாய்ப் பேசாதடி
வெட்கமில்லாமல்—இனித்
தானேபசித் தாலும்புலி
புல்லைத்தின்னுமோ;
226வையாபுரிப்:✓
சிரித்துச் சரக் குப்பைக்குள்ளே
கையிடாதடி—இப்போ
தீட்டினம ரத்திற் கூர்மை
பார்ப்பதென்னடி.
பழனிப்:✓
கோணிக் கோணி வீண்பெருமை
பேசிக்கொள்ளுறாய்—எந்தக்
குதிரைக்குவால் படைத்தாலுங்
குண்டிமட்டடி
227வையாபுரிப்:✓
காணி கொள்ள வந்தபள்ளி
நீயல்லவேடி—நானுங்
காணுரேன்தேங் காயுநாய்க்குத்
தங்குமோபோடி.
பழனிப்:✓
தப்பி லிபோ டிமிரட்டி
மீன்பிடிக்கிறாய்—இளை
தானேசிறுத் தாலுமந்தப்
படியுஞ்சிறுக்குமோ
228வையாபுரிப்:✓
துப்பற் றநா யேபோடி
இப்பவுநீயே—நெஞ்சைத்
தொட்டுப்பார்த்துப் பேசடியடி
சொட்டைத்தலைச்சி.
பழனிப்:✓
நாயு நீயே நரியுநீயே
சிங்கமுநானே—இந்த
நாடறியு முன்சேதிக
ளெல்லாந்தெரியும்
229வையாபுரிப்:✓
ஈயம் வெள்ளி யாமோவென்னை
யிகழுறாயடி—சேகம்
ஏறினமு டிக்குச்சுழி
சுத்தம்பார்க்கிறாய்.
பழனிப்:✓
உங்கள் தெய்வம் மானங்கெட்டு
நிருவாணத்தோடே—யிந்த
ஊரெங்குஞ் சுற்றினதை
நீயுங்கேளாயோ
230வையாபுரிப்:✓
சங்கை யில்லா மலேயுங்கள்
தெய்வம்பெண்களை—முன்னே
தானையையெ டுத்துக்கொண்டு
மானம்பார்த்ததே.
பழனிப்:✓
மோட்டுப் புத்தி யாலேயுங்காள்
கைலாசநாதர்—தானே
முன்னாலிற் பள்ளனான
முறைமைகேளாயோ
231வையாபுரிப்:✓
ஆட்டைத்தோளிற் போட்டுக்கொண்டு
தேடியலைந்த—இடையன்
அல்லவோவுங் கள்மாயவன்
அறிவில்லாதவன்.
பழனிப்:✓
பெண்டி ரண்டு வைத்திருந்துஞ்
சன்னியாசியா—மென்றுன்
பெம்மானாங்கை மழுவெடுத்
தாடவில்லையோ
232வையாபுரிப்:✓
பெண்ட நேகம் பேரிருந்தும்
உங்கள்மாயவன்—வால
பிரமசாரி யென்றுநெய்யிற்
கையிடலையோ.
பழனிப்:✓
பசிபொ றுக்க மாட்டாமலே
சோற்றுக்குச்செத்தே—யுங்கள்
பரமனார்நஞ் சுண்டகதை
நானறியேனோ;
233வையாபுரிப்:✓
புசித்தி டவே சோறுகிடை
யாமலேதானே—யுங்கள்
புங்கவனார் மண்ணையுண்டு
கக்கவில்லையோ.
பழனிப்:✓
வில்லா லடி பட்டுங்கல்லால்
எறியும்பட்டே—ஒரு
வேடன்காலா லுதைபட்டா
னுங்களாண்டவன்;
234வையாபுரிப்:✓
எல்லா ருஞ்சீ யென்னத்தானே
திருடியேகட்டுண்—டுங்கள்
இறைவன்க யிற்றாலடி
பட்டானில்லையோ.
பழனிப்:✓
மாடெ டுக்கப் புலியுறிற்
றானேயிருந்தே—யுங்கள்
மத்தனும்வீ டில்லாமலே
பித்தனுமானான்
235வையாபுரிப்:✓
ஆடு மேய்ச்சி டையர்வீட்டில்
எச்சில்பொறுக்கு—முங்கள்
அச்சுதற்கு மாடுமேய்ச்ச
புத்தியும்போமோ.
பழனிப்:✓
விறகெ டுத்து மீன்பிடித்து
மண்ணைச்சுமந்தே—யுங்கள்
விமலனார் பிச்சையுமெ
டுத்தாரில்லையோ
236வையாபுரிப்:✓
குறுகிப் போயுந் தானம்வாங்கி
மானமில்லாமல்—உங்கள்
கோபாலன்வெண் ணெய்திருடித்
தின்றானில்லையோ.