முருகன் App
வையாபுரிப் பள்ளு
குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்
பண்ணைத் தலைவன் வரவு16 / 49
1காப்புப்பாயிரம்2அவையடக்கம்3பள்ளிகள் வரவு4பழனிப்பள்ளி கலிப்பா5பள்ளன் வரவு6பள்ளன் தன் பெருமை கூறல்7பள்ளியர் குடித்தனங் கூறல்8பள்ளியர் நாட்டுவளங் கூறல்9குறியிற் கூக்கேட்டல்10மழைகவேண்டித் தெய்வம் பராவல்11வெறியயர்வேலன் நல்வர மளித்தல்12மழைக்குறி யோர்தல்13மழைகாலூன்றல்14வெள்ளம் வரவு15ஆற்றுச்சிறப்புக் காண்டல்16பண்ணைத் தலைவன் வரவு17மூத்தபள்ளி முறையீடு18இளையபள்ளி முறையீடு19பண்ணைத் தலைவன் இளைய பள்ளியை உரைப்பல்20பள்ளன் வெளிப்படல்21பண்ணைத் தலைவன் பண்ணைச்செயல் வினாவல்22பள்ளன் பண்ணைச்செயல் கூறல்23மாட்டுவகை24கலப்பை, மேழி, நுகம்25வயலெருவைக்க ஆயரை யழைத்தல்26ஆயர் வரவு27ஆயர் தம் பெருமை கூறல்28மூத்தபள்ளி சாடிகூறல்29பள்ளன் கிடைவைத்து வந்தான்போற் கூறல்30பள்ளனைத் தொழுவில் மாட்டல்31குட்டையிற் பள்ளனைக் கண்டுஇளையபள்ளி புலம்பல்32மூத்தபள்ளி பள்ளனுக்குச் சோறு கொண்டுவருதல்33குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்34குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்35பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.36பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்37நன்னாட்குறித்து நாளேரிடல்38காளைகளை ஏரிற்பூட்டல்39காளை வெருண்டது பள்ளத்துப் பாய்தல்40பள்ளிகள் புலம்பல்41பள்ளனெழுந்து வித்துழுது நாற்றுப்பாவுதல்42நாற்று நடல்43தொழி போடல், நாற்றுப்பறித்தல்44நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு45விளைந்தபின் செப்பஞ் செய்தல்46நெல் அளத்தல்47மூத்தபள்ளி முறையீடு48பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்49வாழ்த்தும் நூல் பயனும்
வையாபுரிப் பள்ளு · குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்

பண்ணைத் தலைவன் வரவு

75கலிப்பா✓
கசாதிகளுஞ் சேருங் காலகணகொல் வாய்குளங்கள்
உசாவிடத்தண் ணீருமெங்கு மோடிப் பெருகிடவே
நிசாசரரை வென்றருளு நித்தன் சிவகிரியான்
விசாகனார் பண்ணை விசாரிப்பான் வந்தானே.
76சிந்து✓
இராகம்: நாகவராளி. ரூபக தாளம்
மூளிக் காது மூரலிட்ட
தாழி வயிறுங்—கட்டை
மொட்டைமீசை யுங்கருங்
குட்டைக்கழுத்தும்
மூளை யடைந்த கண்ணு
மூளை நாசியும்—பெரும்
போத்துரலை யேநிக
ரொத்தவிடையும்
ஊளை வாயுந் தலையிலே
மோளை மயிரு—மஞ்சி
யொத்தநரை யுஞ்சுரை
வித்துப்போற்பல்லும்
கேளிக் கையாய்ப் பேசிப்புல்லைக்
காளை யைப்போலே—முரு
கேரனைப்பார்த் துப்பண்ணைக்
காரனார்வந்தார்.
77✓
வந்த பண்ணைக் காரன்முன்பு
சந்தோ சத்துடன்—நல்ல
வட்டமிட்ட கோழியொரு
பெட்டியவலும்
பந்தி யாக வைத்துநின்று
வந்தனை செய்தே—எங்கள்
பண்ணைக்காரத் தேவரீரைக்
கும்பிடுகிறோம்
மந்தி வாயெம் மாண்டவரைக்
கும்பி டுகிறோங்—கீரை
மத்துப்போலத் தலையாரைக்
கும்பிடுகிறோம்
தொந்தி வயிற் றாண்டவரைக்
கும்பி டுகிறோம்—………
……… ………
78✓
கும்பிட் டபள் ளியர்க்குள்ளே
குமரி யாரென்று—மெள்ளக்
கூர்ந்துபார்த்துச் சுவரின்மேல்
சாய்ந்திருப்பாராம்
தம்பி யின்பெண் சாதியென்று
செம்பி மகளைப்—பாக்குத்
தாடியென் றவள்மேலே
ஓடிவீழ்வாராம்
வம்புந் தும்பும் பேசித்தடிக்
கம்பி னாலேயே—வீரி
மார்பிற்குத்தி யென்னுடன்பிர
தாபியென்பாராம்
சொம்பி மூத்த பள்ளிக்கூத்தான்
ரொம்பச் சொல்லியே—புகை
சுத்தித்தரச் சொல்லிவாங்கி
வைத்துக்கொள்வாராம்.
79✓
தள்ளி நில்லா யென்றேயொரு
பள்ளி யைப்பார்த்துக்—கண்ணாற்
சன்னைக்காட்டிக் களத்தில்வா
பின்னையென்பாராம்
முள்ளிக் காய்கள் கொண்டுவராக்
கள்ளி நீபோடி—யென்று
மூளிமகள் காத்தியைப்போய்க்
கூளிகொள்வாராம்
கள்ளுக் குடித் தவர்போலே
துள்ளித் துடித்தே—யொரு
காலைத்தூக்கி நாச்சிமடி
மேலேவைப்பாராம்
குள்ளி மக ளாமிலைய
பள்ளி யைப்பார்த்தே—யுன்றன்
குடும்பனெங்கே யென்றதட்டி
யிரும்புசெய்வாராம்.