முருகன் App
வையாபுரிப் பள்ளு
குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்
பள்ளன் பண்ணைச்செயல் கூறல்22 / 49
1காப்புப்பாயிரம்2அவையடக்கம்3பள்ளிகள் வரவு4பழனிப்பள்ளி கலிப்பா5பள்ளன் வரவு6பள்ளன் தன் பெருமை கூறல்7பள்ளியர் குடித்தனங் கூறல்8பள்ளியர் நாட்டுவளங் கூறல்9குறியிற் கூக்கேட்டல்10மழைகவேண்டித் தெய்வம் பராவல்11வெறியயர்வேலன் நல்வர மளித்தல்12மழைக்குறி யோர்தல்13மழைகாலூன்றல்14வெள்ளம் வரவு15ஆற்றுச்சிறப்புக் காண்டல்16பண்ணைத் தலைவன் வரவு17மூத்தபள்ளி முறையீடு18இளையபள்ளி முறையீடு19பண்ணைத் தலைவன் இளைய பள்ளியை உரைப்பல்20பள்ளன் வெளிப்படல்21பண்ணைத் தலைவன் பண்ணைச்செயல் வினாவல்22பள்ளன் பண்ணைச்செயல் கூறல்23மாட்டுவகை24கலப்பை, மேழி, நுகம்25வயலெருவைக்க ஆயரை யழைத்தல்26ஆயர் வரவு27ஆயர் தம் பெருமை கூறல்28மூத்தபள்ளி சாடிகூறல்29பள்ளன் கிடைவைத்து வந்தான்போற் கூறல்30பள்ளனைத் தொழுவில் மாட்டல்31குட்டையிற் பள்ளனைக் கண்டுஇளையபள்ளி புலம்பல்32மூத்தபள்ளி பள்ளனுக்குச் சோறு கொண்டுவருதல்33குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்34குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்35பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.36பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்37நன்னாட்குறித்து நாளேரிடல்38காளைகளை ஏரிற்பூட்டல்39காளை வெருண்டது பள்ளத்துப் பாய்தல்40பள்ளிகள் புலம்பல்41பள்ளனெழுந்து வித்துழுது நாற்றுப்பாவுதல்42நாற்று நடல்43தொழி போடல், நாற்றுப்பறித்தல்44நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு45விளைந்தபின் செப்பஞ் செய்தல்46நெல் அளத்தல்47மூத்தபள்ளி முறையீடு48பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்49வாழ்த்தும் நூல் பயனும்
வையாபுரிப் பள்ளு · குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்

பள்ளன் பண்ணைச்செயல் கூறல்

93கலிப்பா✓
வெல்லுஞ் சிவகிரியில் வேலர்பண்ணைக் காரனுக்கு
நெல்லுவகை மாட்டுவகை நீண்டகொழுக் கொண்டிவகை
நல்ல கலப்பைவகை நகத்தடியு மேழிவகை
வல்லபரம் பும்பள்ளன் வகைகண்டு சொல்லுவனே.
94சிந்து✓
இராகம்: யதுகுல காம்போதி. அடதாளச்சாப்பு
செலவான நெல்லைக்
கேளும ணல்வாரி
சிவகிரி வேலர்
சத்திக்குள் ளாச்சு
வலிமைசெய் விசைய
கிரிவேலச் சின்னோவன்
வங்கிநா ராயண
னைக்கை கொண்டான்
சலிகைசெய் தேயிடைக்
காடான்ப ரந்து
தனியே போனது
மனியாய மையோ
புலையரா கியவு
லோபியர் வீட்டிற்
புழுதிய டைந்து
போச்சுகா ணாண்டே.
95✓
மருவிய ராம
பாணமெ திர்த்தோரை
வாணாளை வாங்குந்
தண்ணீரை வாங்கும்
விரவிக்கல லாற்றில்
கல்லுண்டை மெத்த
விழுந்ததே யினியும்
பயிரிட லாமோ
பரிவுசேர் பெண்க
ளுக்குக்கோ தும்பைப்
பாசி யானதால்
அதனைக்கை விட்டேன்
சுருணைவா ரிகதி
தன்னையும் வாரிச்
சும்மா தானிருக்
காதுகா ணாண்டே.
96✓
அழகிய மணவா
ளனிலத் துக்கே
யாகாமல் வாரிக்
குள்ளாகிப் போனான்
கழனிசேர் சோலைப்
பூம்பாளை யெல்லாங்
கதம்பன் கமுகுத்
தோப்புக்கே காணும்
வளமைசேர் வையா
புரிக்குளத் தில்லே
மதகடி யிற்செந்
தாழையி ராச்சு
இளகிய குலைவா
ழைநெல் லரிசி
யிருக்கா ததுவு
நமக்கே காணாண்டே.
97✓
இந்தவ கையிலே
பட்டடை நெல்லில்
எட்டிலட் சஞ்ச
லகைநெல் லாச்சு
பைந்தமிழ் சேர்சி
வகிரியா னுக்குப்
படித்தரத் துக்கோர்
ஆயிரஞ் சலகை
தந்தருள் சுற்றுக்
கோவிலுக் கைந்நூறு
சலகைநெல் பெரிய
வள்ளத்தா லீந்தேன்
விந்தைசேர்ந் தருளெட்
டுச்சத்தி ரத்துக்கும்
வேண்டின நெல்லை
யீந்தேன்கா ணாண்டே.
98✓
எங்களி டும்பன்
படித்தரத் துக்கே
எண்பது சலகை
நெல்லுமே யீந்தேன்
பொங்குஞ்சொந் தக்கு
ராவடி வேலற்கும்
புனிதம் தாகிய
சிவலிங்கத் துக்கும்
அங்கெழுந் தருளுஞ்
சுப்பிர மணியற்கும்
அன்றாடப் பூசைப்
படித்தரத் துக்கும்
இங்கித மானபு
னுகுச்சம் பாநெல்லில்
இருநூறு சலகை
ஈந்தேன்கா ணாண்டே.
99✓
திருவாவி நன்குடி
வேலவ ருக்குச்
செலவுக்கு நூறு
சலகைநெல் லீந்தேன்
பெரியநா யகித்தாய்
படித்தரத் துக்குப்
பெரியவள் ளத்தா
லிருநூறு சலகை
கருதிய ராயப்
பெருமாள்த னக்கும்
கயிலாய நாதர்
படித்தரத் துக்கும்
இருநூறு சலகை
நெல்லுஞ் செலவாச்சு
இன்னுஞ் செலவைக்
கேளுங்கா ணாண்டே.
100✓
எங்களி லட்சுமி
நாராய ணனுக்கே
எழுபது சலகை
நெல்லுமே போகும்
பொங்கஞ்சேர் பாதி
ரைப்பிள்ளை யாருக்குப்
பூசைக் கைம்பது
சலகைநெல் வேணும்
அங்காளம் மன்மாரி
அம்மன்ற னக்கும்
ஐம்பது சலகை
நெல்லுமே போச்சு
திங்கள் சூரிய
னிதுமுத லாகிய
தெய்வங்க ளுக்குநெல்
ஈந்தேன்கா ணாண்டே.
101✓
தூரிநாச் சிமார்
அழகுநாச் சிமார்
துற்கையம் மன்னெட்
டாலம்ம னுக்கும்
ஏரிநாச் சிமார்
பேராவு டையார்க்கும்
எங்கள்வை யாபுரி
யீச்சுர னார்க்கும்
காருநட் டாற்றுக்
கன்னிமா ருக்கும்
கணப்படி ராயன்
படித்தரத் துக்கும்
சூரியச் சம்பா
நெல்லிலே நானூற்றுத்
தொண்ணூறு சலகை
ஈந்தேன்கா ணாண்டே.
102✓
உலவுஞ்சண் முகநதி
விசையவே லாயுதன்
உதவுங்கா சிவிசு
வேச்சுர னுக்கும்
இலகுமச் சுதநா
ராயண னுக்கும்
எங்கள்சண் முகநதி
வேலவ னுக்கும்
துலங்கன்ன பூரணி
விசாலாட் சிக்கும்
துய்யசண் முகநதிக்
கணபதிக் கும்மே
தலையதி ரிநெல்லி
லேயைந் நூறு
சலகைநெல் லையுமீந்
தேன்கா ணாண்டே.
103✓
இங்கிலுண் டானகோ
யிற்படித் தரத்துக்(கு)
எப்படிக் குமைத்
துக்கொள்ளு வேனான்
துங்கனா கியசிவ
கிரிவேல வற்குச்
சுதனாக வந்த
குமாரச்சின் னோவன்
பிங்கன்வி சையகி
ரிவேலச் சின்னோவன்
பிராமண போசனத்
துக்குத்தி ருத்தியாய்க்
குங்குமச் சம்பாநெல்
கேட்டகேள் விக்கெல்லாம்
கொடுத்துவ ரல்பிர
யாசைகா ணாண்டே..