முருகன் App
வையாபுரிப் பள்ளு
குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்
குறியிற் கூக்கேட்டல்9 / 49
1காப்புப்பாயிரம்2அவையடக்கம்3பள்ளிகள் வரவு4பழனிப்பள்ளி கலிப்பா5பள்ளன் வரவு6பள்ளன் தன் பெருமை கூறல்7பள்ளியர் குடித்தனங் கூறல்8பள்ளியர் நாட்டுவளங் கூறல்9குறியிற் கூக்கேட்டல்10மழைகவேண்டித் தெய்வம் பராவல்11வெறியயர்வேலன் நல்வர மளித்தல்12மழைக்குறி யோர்தல்13மழைகாலூன்றல்14வெள்ளம் வரவு15ஆற்றுச்சிறப்புக் காண்டல்16பண்ணைத் தலைவன் வரவு17மூத்தபள்ளி முறையீடு18இளையபள்ளி முறையீடு19பண்ணைத் தலைவன் இளைய பள்ளியை உரைப்பல்20பள்ளன் வெளிப்படல்21பண்ணைத் தலைவன் பண்ணைச்செயல் வினாவல்22பள்ளன் பண்ணைச்செயல் கூறல்23மாட்டுவகை24கலப்பை, மேழி, நுகம்25வயலெருவைக்க ஆயரை யழைத்தல்26ஆயர் வரவு27ஆயர் தம் பெருமை கூறல்28மூத்தபள்ளி சாடிகூறல்29பள்ளன் கிடைவைத்து வந்தான்போற் கூறல்30பள்ளனைத் தொழுவில் மாட்டல்31குட்டையிற் பள்ளனைக் கண்டுஇளையபள்ளி புலம்பல்32மூத்தபள்ளி பள்ளனுக்குச் சோறு கொண்டுவருதல்33குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்34குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்35பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.36பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்37நன்னாட்குறித்து நாளேரிடல்38காளைகளை ஏரிற்பூட்டல்39காளை வெருண்டது பள்ளத்துப் பாய்தல்40பள்ளிகள் புலம்பல்41பள்ளனெழுந்து வித்துழுது நாற்றுப்பாவுதல்42நாற்று நடல்43தொழி போடல், நாற்றுப்பறித்தல்44நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு45விளைந்தபின் செப்பஞ் செய்தல்46நெல் அளத்தல்47மூத்தபள்ளி முறையீடு48பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்49வாழ்த்தும் நூல் பயனும்
வையாபுரிப் பள்ளு · குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்

குறியிற் கூக்கேட்டல்

29கலிப்பா✓
தாவாயா னைச்சிறையி னாட்டிவைத்தோ னாட்டிலொன்றும்
பாவாயே மாந்தளிரைப் பாராய்கா ரொன்றுகுழல்
காவாயி லங்குமென்றே களறியே கடைசியர்கள்
கூவாயென் றந்தக் குயின்மொழியைக் கூறுவரே.
30சிந்து✓
இராகம்: நாதநாமக்கிரியை. சம்பை தாளம்
சத்துருசங் காரனெங்கள்
பழனிச்சிவ கிரிவேலன்
சந்ததியுந் தழைக்கவே-கூவாய்குயிலே
அத்தர்சிவ பத்தர்ரி
பத்தர்விப் பிரமர்களும்
அம்புவியில் வாழவே-கூவாய் குயிலே
புத்திரர்ப சுக்குலங்கள்
கற்புடைய பத்தினியர்
பொற்புலவி வாழவே-கூவாய் குயிலே
வித்வசன ரும்பெரிய
தத்துவமு ணர்ந்தவரு
மேன்மைபெற்று வாழவே-கூவாய் குயிலே
31✓
திங்களும் மாரிபெய்(து)
எங்கும்விளை வேற்றவே
செங்கோன்மை தழைத்தோங்கக். கூவாய் குயிலே
பொங்குமுயர் வையாபுரி
நாடுங்கற் பகநாடு
போற்செழித் தோங்கவே—கூவாய் குயிலே
வங்கார சமுத்திரைமை
யன்பள்ளிக் குளமுதலாய்
வையாபுரிக் குளநிறையக்—கூவாய் குயிலே
கங்குல்செறி யாறாறு
நூறாறாய ரட்டமங்
கலமீராறு பள்ளியோங்கக்—கூவாய் குயிலே.
32✓
விருதுகட்டா ரிராயன்
கருதுவாகைத் தொடையலணி
வேடர்குலந் தழைத்தோங்கக்—கூவாய் குயிலே
திருமருவு புயசயில
வேலச்சின் னோவதுரை
தீர்க்காயு சாயிருக்கக்—கூவாய் குயிலே
மருவுலவு சண்டன்வங்கி
சம்வோவு மஞ்சள்மணம்
மாறாமல் வாழவே—கூவாய் குயிலே
துரைவிசைய கிரிவேலச்
சின்னோவாய் யன்பட்டந்
துருவப்பட்டம் போல்விளங்கக்—கூவாய் குயிலே.