முருகன் App
வையாபுரிப் பள்ளு
குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்
பள்ளிகள் புலம்பல்40 / 49
1காப்புப்பாயிரம்2அவையடக்கம்3பள்ளிகள் வரவு4பழனிப்பள்ளி கலிப்பா5பள்ளன் வரவு6பள்ளன் தன் பெருமை கூறல்7பள்ளியர் குடித்தனங் கூறல்8பள்ளியர் நாட்டுவளங் கூறல்9குறியிற் கூக்கேட்டல்10மழைகவேண்டித் தெய்வம் பராவல்11வெறியயர்வேலன் நல்வர மளித்தல்12மழைக்குறி யோர்தல்13மழைகாலூன்றல்14வெள்ளம் வரவு15ஆற்றுச்சிறப்புக் காண்டல்16பண்ணைத் தலைவன் வரவு17மூத்தபள்ளி முறையீடு18இளையபள்ளி முறையீடு19பண்ணைத் தலைவன் இளைய பள்ளியை உரைப்பல்20பள்ளன் வெளிப்படல்21பண்ணைத் தலைவன் பண்ணைச்செயல் வினாவல்22பள்ளன் பண்ணைச்செயல் கூறல்23மாட்டுவகை24கலப்பை, மேழி, நுகம்25வயலெருவைக்க ஆயரை யழைத்தல்26ஆயர் வரவு27ஆயர் தம் பெருமை கூறல்28மூத்தபள்ளி சாடிகூறல்29பள்ளன் கிடைவைத்து வந்தான்போற் கூறல்30பள்ளனைத் தொழுவில் மாட்டல்31குட்டையிற் பள்ளனைக் கண்டுஇளையபள்ளி புலம்பல்32மூத்தபள்ளி பள்ளனுக்குச் சோறு கொண்டுவருதல்33குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்34குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்35பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.36பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்37நன்னாட்குறித்து நாளேரிடல்38காளைகளை ஏரிற்பூட்டல்39காளை வெருண்டது பள்ளத்துப் பாய்தல்40பள்ளிகள் புலம்பல்41பள்ளனெழுந்து வித்துழுது நாற்றுப்பாவுதல்42நாற்று நடல்43தொழி போடல், நாற்றுப்பறித்தல்44நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு45விளைந்தபின் செப்பஞ் செய்தல்46நெல் அளத்தல்47மூத்தபள்ளி முறையீடு48பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்49வாழ்த்தும் நூல் பயனும்
வையாபுரிப் பள்ளு · குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்

பள்ளிகள் புலம்பல்

170கலிப்பா✓
துள்ளிப் பொலியெருது தொடர்ந்துபள்ள னைப்பாய்ந்து
தள்ளிவிட வேமயங்கித் தான்விழுந்த சமயமதில்
பள்ளினஞ்சேர்ந் தருள்ரோமா புரவழிசேர் தென்பழனிப்
பள்ளியுடன் வையாபுரிப் பள்ளியும்வந் தெய்தினளே.
171இளையபள்ளி✓
சிந்து
இராகம்: கேதாரகௌளம். ஆதி தாளம்
புருசனைக் கண்டவுட னன்னாள்—மெத்தப்
புலம்பியே பள்ளியீது சொன்னாள்,
மருளப்பள்ளார்க் கேச்சுக்கிட மாச்சே—யுன்பலம்
மாட்டுக்கு மாட்டாமற் போச்சே
ஒருபணத்துச் சாராயங் குடித்தாய்—மிரண்டே
ஓடின மாட்டையேன் பிடித்தாய்
திருடியா னிளையபள்ளி முறையோ—விரும
தேவ னெழுதினதுங் குறையோ.
172இளையபள்ளி✓
இன்றுநீ யார்முகத்தில் விழித்தாய்—வாய்க்கிருதாய்
எந்தத்தெய் வங்களைநீ பழித்தாய்
குன்றுபோ லொருவரப்பில் வீழ்ந்தா—யெவருக்குக்
குடிகேடு செய்துநீ வாழ்ந்தாய்
நன்றென்று புத்திசொன்னாற் றட்டாய்—இப்போ
நட்டாற்றிற் கைநழுவ விட்டாய்
மன்றில்த னியேவிட்டுச் சதித்தாய்—புலம்பி
வாடவே யென்றலையில் விதித்தாய்.
173மூத்த பள்ளி✓
என்னைவிட் டொருநாளும் பிரியா—யொருவர்போ
லிந்நாளிற் கவடென்று மறியாய்
உன்னைவிட் டென்கவலை தீரேன்—இனியுண்டான
துரைத்தே னொருவர்முகம் பாரேன்
பன்னாளும் பொய்யெனக்கு விண்டாய்—தென்பழனிப்
பள்ளிதனைக் கொண்டபலன் கண்டாய்
சின்னப்பள்ளி கைமருந்துக் கள்ளா—இந்தத்
தேசம்புகழ் வையாபுரிப் பள்ளா.
174✓
இளையபள்ளி யுடனேநித்தம் படுத்தா—யுனக்குப்பின்
எல்லாவற்றை யுமவட்குக் கொடுத்தாய்
தழுவியுனைக் கூடியிருப் பேனோ—யிளையவள்
சத்தியத் தோசமது தானோ
மொழிகூறி யாரைநோக வைதாய்—பழனி
முருகற்கு மென்னகுறை செய்தாய்
களைதீர்ந் தெழுந்திருப்பாய் குடும்பர—ஈதோர்
கதையாச்சே வையாபுரிப் பள்ளா.