முருகன் App
வையாபுரிப் பள்ளு
குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்
காளைகளை ஏரிற்பூட்டல்38 / 49
1காப்புப்பாயிரம்2அவையடக்கம்3பள்ளிகள் வரவு4பழனிப்பள்ளி கலிப்பா5பள்ளன் வரவு6பள்ளன் தன் பெருமை கூறல்7பள்ளியர் குடித்தனங் கூறல்8பள்ளியர் நாட்டுவளங் கூறல்9குறியிற் கூக்கேட்டல்10மழைகவேண்டித் தெய்வம் பராவல்11வெறியயர்வேலன் நல்வர மளித்தல்12மழைக்குறி யோர்தல்13மழைகாலூன்றல்14வெள்ளம் வரவு15ஆற்றுச்சிறப்புக் காண்டல்16பண்ணைத் தலைவன் வரவு17மூத்தபள்ளி முறையீடு18இளையபள்ளி முறையீடு19பண்ணைத் தலைவன் இளைய பள்ளியை உரைப்பல்20பள்ளன் வெளிப்படல்21பண்ணைத் தலைவன் பண்ணைச்செயல் வினாவல்22பள்ளன் பண்ணைச்செயல் கூறல்23மாட்டுவகை24கலப்பை, மேழி, நுகம்25வயலெருவைக்க ஆயரை யழைத்தல்26ஆயர் வரவு27ஆயர் தம் பெருமை கூறல்28மூத்தபள்ளி சாடிகூறல்29பள்ளன் கிடைவைத்து வந்தான்போற் கூறல்30பள்ளனைத் தொழுவில் மாட்டல்31குட்டையிற் பள்ளனைக் கண்டுஇளையபள்ளி புலம்பல்32மூத்தபள்ளி பள்ளனுக்குச் சோறு கொண்டுவருதல்33குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்34குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்35பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.36பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்37நன்னாட்குறித்து நாளேரிடல்38காளைகளை ஏரிற்பூட்டல்39காளை வெருண்டது பள்ளத்துப் பாய்தல்40பள்ளிகள் புலம்பல்41பள்ளனெழுந்து வித்துழுது நாற்றுப்பாவுதல்42நாற்று நடல்43தொழி போடல், நாற்றுப்பறித்தல்44நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு45விளைந்தபின் செப்பஞ் செய்தல்46நெல் அளத்தல்47மூத்தபள்ளி முறையீடு48பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்49வாழ்த்தும் நூல் பயனும்
வையாபுரிப் பள்ளு · குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்

காளைகளை ஏரிற்பூட்டல்

163கலிப்பா✓
வயலில்வந்து நின்றுகொண்டு வடிவேல ரைப்புகழ்ந்தே
அயலிலே நின்றபள்ள ரனைவோருங் கூட்டமிட்டுச்
செயலான கட்குடித்துச் சீறியிரு கண்சிவக்க
இயலிசைசேர் குரவையுமிட்டேர்பூட்டத்துணிந்தனரே.
164சிந்து✓
இராகம்: சௌராஷ்டிரம். அடதாளச்சாப்பு
குதித்துக் குதித்துக் கேக்கை போட்டுக்
குடும்ப ரெல்லோருங் கூடியே
குமரர் பதத்தைப் போற்றி வாழ்த்திக்
கூடு கொம்பனைப் பிடிக்கவே
கதித்த பழனிக் குடும்ப னுமொரு
காரி யெருதைத் துரத்திப் போய்க்
கட்டிப் பிடிக்கப் போன வுடனே
எட்டிக் குதித்துப் பாயவே
எதிர்த்தி டும்புல்லைக் காளை யையந்த
இருளக் குடும்பன் பதுங்கிப்போய்
இருகொம் பைப்பிடித் தமட்டி யேயவன்
ஒருகை யால்மெள்ளத் தடவியே
மதித்துப் பிடிக்கச் சோலைக் குடும்பன்
மகனோ டியொரு காளையை
வாலைப் பிடித்துக் காலைத் தூக்க
வட்டம் போடுது பள்ளீரே.
165✓
கீர னைச்சிறை விடுத்த தமிழன்
சார மதனை வினவினோர்
கிளரி டுஞ்சிவ கிரிமு ருகையன்
வளரி டும்பண்ணை வயலிலே
சூரத் துடனே யருளக் குடும்பன்
காரிச் செவலை யெருதையே
சுற்றி முதுகைத் தடவிக் கொம்பைப்
பற்றி யேபிடித் திழுக்கவே
மாரிக் குடும்ப னோடிப் போயொரு
சூரிக் கொம்பனைப் பிடிக்கவே
மருதக் குடும்பன் மயிலை யெருதைப்
பொருதிப் பிடிக்க முடியாமல்
ஓரத்தில் வந்தவன் வீழ்க வேயங்கே
தூரத்தி னின்றிரும் பெரியானும்
உடனே யேவந்து தூக்கி யெடுக்க
விடுவி டென்கிறான் பள்ளீரே.
166✓
முச்செகந் துதிக்கு மோக னனெழிற்
பச்சைம யிற்பரி வாகனன்
மூல காரணன் சிவகி ரிவடி
வேல னார்பண்ணை வயலிலே
பிச்சைக் குடும்ப னோடி யேநடு
உச்சிக் கொம்பனை முடுக்கியே
பிறகே தொடர்ந்து போகை யிலது
கறக றென்றுதான் சுழலவே
நொச்சுக் கொட்டியந் தோணிக் குடும்பன்
பிச்சி மகளுங் காணவே
நொடியி லேயொரு நெடும றையானைப்
படப டென்றுபோய்ப் பிடிக்கவே
மெச்சிக் கொண்டாளந்த ராயக் குடும்பன்
கெச்சித மாய்க்கட்டைக் காளையை
விடுவி டென்றவன் பிடித்து முதுகைத்
தடவு றான்பாரும் பள்ளீரே.
167✓
மாசி லாமணித் தீப னார்சிவ
கோச மந்திர ரூபனார்
வரியெ னுமரு ரூப னார்சிவ
கிரிமு ருகனார் வயலிலே
ஏசடி யான்மீசை முறுக்கிக் கொண்டொரு
ஊசிக் கொம்பனைப் பிடித்தவன்
இழுத்து மற்கட்ட நாச்சி மகளுங்
களுக்கி னென்றுதான் சிரிக்கவே
பேசாமற் சவரி முத்த னுங்கிட்டக்
கூசாம லேநிமி சத்தினில்
பெரிய வெருதைச் சருவிப் பிடிக்க
அரிய நாச்சிக் குடும்பனும்
ஓசனை பண்ணாமற் கரும றையானைக்
கீசனைப் போலவே ரோசமாய்
ஓடிப் பிடிக்கக் கரணம் போடும்
வேடிக்கை பாரும் பள்ளீரே.
168✓
திசைபோற் றுங்கவி ராச பண்டிதன்
விசையகி ரிவேலச் சின்னோவன்
சிந்தையிற் கூடிக் கொண்ட பழனிக்
கந்தனார் பண்ணை வயலிலே
அசையாமற் கோணவாய்க் குடும்ப னுமொரு
தசையான வெள்ளை யெருதையும்
அதட்டிப் பிடிக்கப் போகை யிலது
வெருட்டி எதிர்த்துக் கொள்ளவே
விசையாகக் கொம்பைப் பிடித்துக் கொண்டவன்
அசையாமற் கட்டி நிறுத்தினான்
வீரிக் குடும்ப னோடிப் போயொரு
காரிச் செங்கன்றைப் பிடிக்கையிற்
புசப லத்தினாற் பாக்கி யமொரு
மசையெ ருத்தைப்போய்ப் பிடிக்கவே
புழுதி வயலிற் றலைக் ழாகவே
விழுவ தைப்பாரும் பள்ளீரே.