முருகன் App
வையாபுரிப் பள்ளு
குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்
தொழி போடல், நாற்றுப்பறித்தல்43 / 49
1காப்புப்பாயிரம்2அவையடக்கம்3பள்ளிகள் வரவு4பழனிப்பள்ளி கலிப்பா5பள்ளன் வரவு6பள்ளன் தன் பெருமை கூறல்7பள்ளியர் குடித்தனங் கூறல்8பள்ளியர் நாட்டுவளங் கூறல்9குறியிற் கூக்கேட்டல்10மழைகவேண்டித் தெய்வம் பராவல்11வெறியயர்வேலன் நல்வர மளித்தல்12மழைக்குறி யோர்தல்13மழைகாலூன்றல்14வெள்ளம் வரவு15ஆற்றுச்சிறப்புக் காண்டல்16பண்ணைத் தலைவன் வரவு17மூத்தபள்ளி முறையீடு18இளையபள்ளி முறையீடு19பண்ணைத் தலைவன் இளைய பள்ளியை உரைப்பல்20பள்ளன் வெளிப்படல்21பண்ணைத் தலைவன் பண்ணைச்செயல் வினாவல்22பள்ளன் பண்ணைச்செயல் கூறல்23மாட்டுவகை24கலப்பை, மேழி, நுகம்25வயலெருவைக்க ஆயரை யழைத்தல்26ஆயர் வரவு27ஆயர் தம் பெருமை கூறல்28மூத்தபள்ளி சாடிகூறல்29பள்ளன் கிடைவைத்து வந்தான்போற் கூறல்30பள்ளனைத் தொழுவில் மாட்டல்31குட்டையிற் பள்ளனைக் கண்டுஇளையபள்ளி புலம்பல்32மூத்தபள்ளி பள்ளனுக்குச் சோறு கொண்டுவருதல்33குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்34குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்35பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.36பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்37நன்னாட்குறித்து நாளேரிடல்38காளைகளை ஏரிற்பூட்டல்39காளை வெருண்டது பள்ளத்துப் பாய்தல்40பள்ளிகள் புலம்பல்41பள்ளனெழுந்து வித்துழுது நாற்றுப்பாவுதல்42நாற்று நடல்43தொழி போடல், நாற்றுப்பறித்தல்44நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு45விளைந்தபின் செப்பஞ் செய்தல்46நெல் அளத்தல்47மூத்தபள்ளி முறையீடு48பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்49வாழ்த்தும் நூல் பயனும்
வையாபுரிப் பள்ளு · குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்

தொழி போடல், நாற்றுப்பறித்தல்

இராகம் கல்யாணி. ஆதி தாளம்
178சிந்து✓
மள்ளர்க ளெல்லோரு மேர்பூட்டி
வளமா கத்தரி சடித்தபின்பு
மெள்ளவி ரட்டித்து முச்சலித்து
விட்டுத்த டவிநா லுழவுழுது
பள்ளிய ரெல்லோரு நாற்றெடுத்துப்
பாங்காய் முடித்துக்குப் பஞ்சேர்த்துத்
துள்ளும யிற்பரி யானைவாழ்த்தித்
தோத்திரஞ் செய்து பணிந்தாரே.
179நடுகை முறை✓
நாற்றையெ டுத்துங்கள் நெற்றிவைத்து
நாலுதி சைகளை நோக்கிவாழ்த்திப்
போற்றித்து தித்துநி ரைவகுத்துப்
புகழ்ந்துரு ரவைமு ழக்கிப்பயிர்
ஈற்றுநெ ருங்காம லணியணியாய்
இடையிற்க லந்துபோ காமல்மெள்ள
மாற்றியே நண்டதூ டேபோகாமல்
வளமாய்ந டுங்கடி பள்ளீரே.
180பள்ளியர் வகை✓
வீரியு நன்னியு டைச்சிசின்னி
வேலிம ருதிபெ ரிச்சிசெம்பி
மாரிதி ருவியி ருளிமுத்தி
மரியாள்முத் தனாச்சி யன்னமையுஞ்
சூரிபு விசாத்தி காத்திசங்கி
சோலைபி றவிச டைச்சிபொன்னி
யாருங்கூ டியேகைச் சித்திரமாய்
அடைவாய் நடுமடி பள்ளீரே.