முருகன் App
வையாபுரிப் பள்ளு
குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்
குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்34 / 49
1காப்புப்பாயிரம்2அவையடக்கம்3பள்ளிகள் வரவு4பழனிப்பள்ளி கலிப்பா5பள்ளன் வரவு6பள்ளன் தன் பெருமை கூறல்7பள்ளியர் குடித்தனங் கூறல்8பள்ளியர் நாட்டுவளங் கூறல்9குறியிற் கூக்கேட்டல்10மழைகவேண்டித் தெய்வம் பராவல்11வெறியயர்வேலன் நல்வர மளித்தல்12மழைக்குறி யோர்தல்13மழைகாலூன்றல்14வெள்ளம் வரவு15ஆற்றுச்சிறப்புக் காண்டல்16பண்ணைத் தலைவன் வரவு17மூத்தபள்ளி முறையீடு18இளையபள்ளி முறையீடு19பண்ணைத் தலைவன் இளைய பள்ளியை உரைப்பல்20பள்ளன் வெளிப்படல்21பண்ணைத் தலைவன் பண்ணைச்செயல் வினாவல்22பள்ளன் பண்ணைச்செயல் கூறல்23மாட்டுவகை24கலப்பை, மேழி, நுகம்25வயலெருவைக்க ஆயரை யழைத்தல்26ஆயர் வரவு27ஆயர் தம் பெருமை கூறல்28மூத்தபள்ளி சாடிகூறல்29பள்ளன் கிடைவைத்து வந்தான்போற் கூறல்30பள்ளனைத் தொழுவில் மாட்டல்31குட்டையிற் பள்ளனைக் கண்டுஇளையபள்ளி புலம்பல்32மூத்தபள்ளி பள்ளனுக்குச் சோறு கொண்டுவருதல்33குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்34குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்35பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.36பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்37நன்னாட்குறித்து நாளேரிடல்38காளைகளை ஏரிற்பூட்டல்39காளை வெருண்டது பள்ளத்துப் பாய்தல்40பள்ளிகள் புலம்பல்41பள்ளனெழுந்து வித்துழுது நாற்றுப்பாவுதல்42நாற்று நடல்43தொழி போடல், நாற்றுப்பறித்தல்44நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு45விளைந்தபின் செப்பஞ் செய்தல்46நெல் அளத்தல்47மூத்தபள்ளி முறையீடு48பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்49வாழ்த்தும் நூல் பயனும்
வையாபுரிப் பள்ளு · குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்

குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்

138கலிப்பா✓
இப்படியே மூத்தபள்ளி யெடுத்துரைத்துச் சேதியெல்லாஞ்
செப்பநா ராசமெனச் செவிதன்னி லேநுழையத்
தப்பிதஞ்செய் தேனீயுந் தான் பொறுக்க வேணுமென்று
கப்புத் தலைக்குடும்பன் கலங்கிப் புகல்வானே.
சிந்து பல்லவி✓
இராகம்: நாதநாமக்கிரியை. அடதாளச்சாப்பு
இதுவேச மயமெனை ரட்சி—புதுமதுர
இங்கித மொழிவை யாபுரிப் பள்ளி
அனுபல்லவி✓
தன்கேடு பிறத்திக்குச் சூடு—மாச்சே
தானாடா தேபோனா லுஞ்சதை யாடும்
வன்மமா யென்காலிற் போடுங்—குட்டை
மரத்தைவெட்டிநீக்கி மகிழ்ந்திப்போ கூடு(இ)
139சரணங்கள்✓
உன்னுடையவார்த்தையைத் தட்டேன்—இனிமேல்
உன்னாணை யென்கொஞ்சப் புத்தியை விட்டேன்
இன்னமி ளையகுடி கட்டேன்—நேற்றும்
இன்றும யங்கிநான் வெகுபாடு பட்டேன்(இது)
தயவென்மேல் வைத்திட வேணும்—இனிச்
சரியொத்த பள்ளர்கண் டால்மன நாணும்
கயவருக் கென்ன.மாக் காணும்—பண்ணைக்
காரனார்க்கென் மீதிற்கவடிப் பாய்த்
தோணும்(இது)
அடிக்கடி யென்னையே தொட்டுக்—கோவம்
ஆகாத டியுனக் கிந்தப்பு ரட்டும்
அடித்துப்பே சுவாயெந்தன் மட்டும்—நம்மள்
அரமனைக் காரிய முன்னாலே கிட்டும்(இது)
சிந்தைநொந் தேனடி கொல்லி—மலர்த்
தேனுக்கிணை யாகிய பூருவ வல்லி
யெந்தள வாகிலுஞ் சல்லி—பேசி
என்னைவி டுவிக்க வேணுநீ சொல்லி.(இது)