முருகன் App
வையாபுரிப் பள்ளு
குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்
பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்48 / 49
1காப்புப்பாயிரம்2அவையடக்கம்3பள்ளிகள் வரவு4பழனிப்பள்ளி கலிப்பா5பள்ளன் வரவு6பள்ளன் தன் பெருமை கூறல்7பள்ளியர் குடித்தனங் கூறல்8பள்ளியர் நாட்டுவளங் கூறல்9குறியிற் கூக்கேட்டல்10மழைகவேண்டித் தெய்வம் பராவல்11வெறியயர்வேலன் நல்வர மளித்தல்12மழைக்குறி யோர்தல்13மழைகாலூன்றல்14வெள்ளம் வரவு15ஆற்றுச்சிறப்புக் காண்டல்16பண்ணைத் தலைவன் வரவு17மூத்தபள்ளி முறையீடு18இளையபள்ளி முறையீடு19பண்ணைத் தலைவன் இளைய பள்ளியை உரைப்பல்20பள்ளன் வெளிப்படல்21பண்ணைத் தலைவன் பண்ணைச்செயல் வினாவல்22பள்ளன் பண்ணைச்செயல் கூறல்23மாட்டுவகை24கலப்பை, மேழி, நுகம்25வயலெருவைக்க ஆயரை யழைத்தல்26ஆயர் வரவு27ஆயர் தம் பெருமை கூறல்28மூத்தபள்ளி சாடிகூறல்29பள்ளன் கிடைவைத்து வந்தான்போற் கூறல்30பள்ளனைத் தொழுவில் மாட்டல்31குட்டையிற் பள்ளனைக் கண்டுஇளையபள்ளி புலம்பல்32மூத்தபள்ளி பள்ளனுக்குச் சோறு கொண்டுவருதல்33குட்டையிற் பள்ளனைக் கண்டு மூத்தபள்ளி கூறல்34குட்டை மீட்கும்படிசெய்ய மூத்தபள்ளியைப் பள்ளன் வேண்டுதல்35பள்ளன் கால் குட்டையைக் கழற்றும்படி பண்ணைத் தலைவனை மூத்தபள்ளி பரவல்.36பள்ளன் வித்துவகை மாட்டுவகை கூறல்37நன்னாட்குறித்து நாளேரிடல்38காளைகளை ஏரிற்பூட்டல்39காளை வெருண்டது பள்ளத்துப் பாய்தல்40பள்ளிகள் புலம்பல்41பள்ளனெழுந்து வித்துழுது நாற்றுப்பாவுதல்42நாற்று நடல்43தொழி போடல், நாற்றுப்பறித்தல்44நடுகை வளப்பத்திடை பள்ளர் பள்ளியர் களிப்பு45விளைந்தபின் செப்பஞ் செய்தல்46நெல் அளத்தல்47மூத்தபள்ளி முறையீடு48பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்49வாழ்த்தும் நூல் பயனும்
வையாபுரிப் பள்ளு · குமாரவிசயகிரிவேலச் சின்னோவையன்

பள்ளிகளிருவரும் உளம்விண்டு ஒருப்படல்

பழனிப்:✓
அரிய ரனைப் பேதிச்சுநீ
சொல்லவேண்டாம்—உனக்
கந்தத்தோசந் தீராதுவை
யாபுரிப்பள்ளி
237வையாபுரிப்:✓
இருபே ரையு வின்னபேத
கங்கள்படுத்தி—முன்னே
இயம்பினது நீதாண்டிதென்
பழனிப்பள்ளி
238பழனிப்:✓
சிவப தஞ்சேர் விசையரங்க
சொக்கநாதன்—மகிழ்
செல்வன்புகழ் விசையகிரி
வேலச்சின்னோவன்
உவப முத்ரி யுந்தரித்தா
ரடிசிவன்மாலும்—வேறே
யொருருவ மென்றுமத
பேதஞ்செய்தாரோ.
239வையாபுரிப்:✓
சங்க ரநா ராயணரா
கியேசிவனும்—உலகில்
சடாட்சரத்தின் சூட்சமதை
நீயறியாயோ
திங்க ளணி வேணியருஞ்
செங்கண்மாலும்—ஒரு
தேசிகவி நாயகந்தென்
பழனிப்பள்ளி
240பழனிப்:✓
செயவி சையன் கிட்ணனையும்
பூசித்தவராம்—அந்தச்
சிவன்சடையில் விளங்குமந்தச்
சேதிகேளாயோ
தயவர் கஞ்ச னூரவர்க்குக்
கத்தூரிரங்கன்—சிவன்
தானாமென்று மொன்றுமீந்த
தகைமைகேளாயோ
241வையாபுரிப்:✓
போன தெல்லாம் போகட்டு
மினிமேலாகிலுந்—தெய்வப்
புதுமைகளைத் தூசித்துநாம்
புகலவொண்ணாது
ஆனாற் புத்தி சாலிதென்
பழனிப்பள்ளி—யந்த
அரியரனென் றுஞ்சிவனும்
வேறேயல்லடி.
பழனிப்:✓
உங்கள் கயி லாசநாதர்
எங்கள்தெய்வமே—எங்கள்
ஒளவி சையமாலும்
உங்கள் தெய்வமே
242வையாபுரிப்:✓
சங்க தியாய்ச் சொன்னாயானாற்
சண்டைவருமோ—நம்மள்
சாமிநாதன் சிவகிரி
வேலனைப்போற்றி.
பழனிப்:✓
இருபே ருங்கூடிச் சிரோதை(ய)
ஞாயம்போலவே—நாமள்
இப்புவியில் வாழ்கலாம்வை
யாபுரிப்பள்ளி
243வையாபுரிப்:✓
குருசீ சன்பால் பழம் போலே
ரகளையில்லாமல்—நாமள்
குணமாக வாழ்கலாந்தென்
பழனிப்பள்ளி;
பழனி:✓
ஒருபா னைச்சர்க் கரைபோலே
இருவருந்தானே—நாமள்
ஒத்துடன்பட் டுவாழ்ந்து
கொள்ளலாமடி;
244வையாபுரிப்:✓
புருச னுக்குச் சம்மதியாய்
இரண்டுபேருமே—கூடிப்
புழைத்திடலாஞ் சொன்னேன்தென்
பழனிப்பள்ளி
பழனிப்:✓
சூடு பாடில் லாமலேநாம்
கூடிப்பிழைப்போம்—நம்மன்
துரைமார்க்கண் டனைப்போல
வாழ்கப்போற்றுவோம்;
245வையாபுரிப்:✓
கூடிக் கெட்ட பேர்களும்பி
ரிந்துவாழ்ந்தோரும்—இந்தக்
குவலயத்திற் காணேன்தென்
பழனிப்பள்ளி.
246பழனிப்பள்ளியும் வையாபுரிப் பள்ளியும்:✓
வேடர்குலம் தழைத்தோங்கப்
போற்றுவோம்வாழி—நம்மள்
விசையகிரிச் சின்னோவய்யன்
நீடூழிகாலம்
நாடான்டுசி லாக்யம் பெற்று
வாழ்கவை—யாபுரி
நாடுசெழித் தோங்கிடவே
வாழ்கவாழி.