முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
அரிதிருமருகனின் றிருவடிமறவா26 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

அரிதிருமருகனின் றிருவடிமறவா

வெண்பா✓
ஆனைமுதற் சிற்றெறும்பீ றானவுயி ரத்தனைக்கும்
போனமளித் தென்றும் புரக்குமொரு—சானவியின்
மைந்தவெழின் மாவை வருமுருகா வென்றனையு
முய்ந்திடவாட் கொள்வா யுவந்து.
பல்லவி✓
அரிதிருமருகனின் றிருவடிமறவா
தன்பாயிருமனமே. (அரி)
அனுபல்லவி✓
கரிசனையுடனன வரதமுமெனையா
ளொருதிருமுருகனென் றுலகெலாமடிதாழ் (அரி)
சரணம்✓
தருமதயாள தயாபரபோதன்
சனனமரணமறத் தவிர்த்திடும்பாதன்
பரமகுமாரனெ னும்ப்ரபுநாதன்
பாததொண்டுகள் பணித் தெதையுஞ்செய்நீதன்(அரி)
சரணம்✓
கற்பகவிடுமொரு கதிர்வடிவேலன்
கடியவினைகடொலைத் திடுமனுகூலன்
அற்பகறனைநினை யார்க்கொருகாலன்
அடிபணிந்தவர்களுக் கருளுஞ்சீலன் (அரி)
சரணம்✓
ஆதிபன்மதிமுத லமரருக்கீசன்
அசுரரைச்செயித்திமை யவர்க்கருணேசன்
ஓதருங்குறுமுனிக் கருளுபதேசன்
ஒப்பின் மாவையிலென்று முறையுஞ்சர்வேசன்(அரி)