முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
ஏழையைக்கார் கண்பாரையா23 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

ஏழையைக்கார் கண்பாரையா

வெண்பா✓
மாவைத் தலமமரு மான்மருகா வுன்னடியைப்
பூவைத் தனவரதம் போற்றுகிறேன்—சேவற்
கொடியோனே குன்றக் குறத்திமண வாளா
வடியேனைக் கார்முருகை யா.
பல்லவி✓
ஏழையைக்கார் கண்பாரையா
கந்தசாமி நீயிவ். (ஏழையைக்)
அனுபல்லவி✓
வேளைக்கிரங்கும் விசாகாசராசரம்
மீதுற்றவெங்கள் மெய்யானபராபரம் (ஏழையைக்)
சரணம்✓
நீடிப்ரபஞ்சம் பொல்லாதது
நிசமாயிக்காயம்
நீரிற்குமிழி நில்லாதது
தேடித்தீராரோகந் தீர்க்குங்கிர்பாகரஞ்
சேடத்ததிகாரஞ் செல்போதுன்றாபரம் (ஏழையைக்)
சரணம்✓
தேவரைச் சிறையின் மீண்டவா
நீயலதென்றுயரைத்
தீர்ப்பாராரென்னை யாண்டவா
ஏவரையுமிரட் சிக்குமொரேதேவா
ஏமனெனையணு காமல்வைத்தாளுஜீவா(ஏழையைக்)
சரணம்✓
கோலப்பவானி பாலகா
மாவைக்கோவிற் கடவை
கோவில்கொண் டிருக்கும்வேலவா
ஆலத்தையுண்ட வரற்குமைந்தாமறை
மூலத்தைக்கும்ப முனிக்குத்தந்ததுரை (ஏழையைக்)23