முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
மாவைநகர்க் கோவில்வாழ்8 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

மாவைநகர்க் கோவில்வாழ்

வெண்பா✓
அத்தாவுன் றஞ்ச மலதென் றனையருள
வித்தா ரணியி லிலையெவரும்—நித்தமெனை
யாள்வடிவே லாறு முகவா வடியேனுன்
சேவடிக்கீழ் வாழவருட் செய்.
பல்லவி✓
மாவைநகர்க் கோவில்வாழ்
தேவாநின் சேவடிக்கீழ்
வாழத்துணைசெய் கந்தஸ்வாமி (மாவை)
அனுபல்லவி✓
ஆவிகளுக் காவியா யகிலாண்டங்களினிறைந்
தருளுஞ்சண்முகாவெனை யாள்சரவணபவா(மாவை)
சரணம்✓
வந்தனம் புரிதொண்டர் வாழ்வின்மகிழ் தயாளா
வாசவன் மகளைமுன் மணந்தபன் னிருதோளா
சந்தத மயிலேறிச் சாரிவரு மொய்யாரா
சாரதர் நந்திகணத் தலைவர்சூழ் தரும்வீரா (மாவை)
✓
வாடாத நீபமலர் மாலையசையு மார்பா
வரநதிமைந்தா வானோர் வணங்குங் கிருபாகரா
கோடாத திரிசூலங் குலவுஞ் சிவகுமாரா
குன்றமெறிந்த வெற்றிக் குளகா வள்ளிமணாளா(மாவை)
✓
தாரகையாறு தாய்மார் தருமுலையுண்ட பாலா
தையன் மீனாட்சியம்மை தந்திடுந் தண்டைக் காலா
சூரபதுமனுடல் துளைத்தசெங்கதிர் வேலா
சுப்ரமணியாதுதி தோற்றுமெய்ஞ்ஞான கோலா(மாவை)
8