முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா9 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா

வெண்பா✓
ஆடுமயி லேறுமுரு கையாவின் னாளிகூர
ரோடுகுடி யேறவரு ளும்பர்பிரான்—மாடிவரு
நஞ்சணியுங் கண்டர்சுத நமபாவுன் றஞ்சமிக
வஞ்சலென வந்தெனையான் வாய்.
பல்லவி✓
தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா ளையனே—மாவைத் தஞ்சமா
தலநின் றருள்சரவணபவ (தஞ்சமா)
அனுபல்லவி✓
தஞ்சமென்றவரை யஞ்சலென்றோர்தயை
தருவாயுன திருதாள்பணி
தமியேனுறு துயர்தீரொரு (தஞ்சமா)
சரணம்✓
அஞ்சு முகத்தினர்க் காறுமுகந் தரும்வேலா—என
தப்பனே யொப்பில்லாத் தற்பரனே யுமைபாலா
அஞ்சுமுகன் றந்த வாறு முகத்தேவா
அயனைச்சிறை யதில்வைத்துல
கருளுத்தம வருள்வைத்தொரு (தஞ்சமா)
✓
அஞ்சுக மென்மொழிக் குஞ்சரி வள்ளிமணாளா—அதி
யற்புதனேபரி சுத்தனே நித்யதயாளா
வஞ்சரஞ்சுஞ் சேவன் மயிலே றொய்யாரா
மறையைத் தமிழ் முனிவற்குரை
சிவசூப்பிர மணியத்துரை (தஞ்சமா)
சரணம்✓
இந்திரர் வானவர் சந்திர சூரியர் போற்ற—உல
கெங்கும் நிறைந்தருள் பொங்கச்சுரர் குடியேற்ற
அந்தம் யாதொன்றாலு மாகாதென் றோர்கால
மமரராடிய வசுரன்மிகுசம ரோடறவடல் செய்குத
(தஞ்சமா) 9