முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
முருகா வொருபோது16 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

முருகா வொருபோது

வெண்பா✓
தேவர்களின் றேவா திருமாள் மருகாநன்
மாவைகநர்க் கோவில் வருமுருகா—யாவருக்குந்
தந்தையென வந்ததையுந் தந்துபரி பாலிக்குங்
கந்தவுமை மைந்தவெனைக் கார்.
பல்லவி✓
முருகா வொருபோது முனைமறவேன்—குரு
மூர்த்த மாயிந்தமு கூர்த்தம் வந்தாளுவாய் (முரு)
அனுபல்லவி✓
தருநிறைமாவைத் தலநிதமுறை
சண்முகனேகந்த சாமியுமைதந்த (முரு)
சரணம்✓
நீபமலர்ந்த நெடியமணி மார்பா
நேர்ந்தவெஞ் சூரனைக் காய்ந்த கிருபாகரா
கோபதியைவிண் குடியேற்று மீஸ்வரா
குன்றமெறிந்த குமரகுருபரா (முரு)
சரணம்✓
பஞ்சபூதியங்க ளஞ்சுமலைந்தாலும்
பாரதனிற்பிர பஞ்சத்துலைந்தாலும்
அஞ்சம்பொடங்கச னஞ்சவெதிர்த்தாலும்
ஆகாமியங்களாட் கொண்டுதடுத்தாலும் (முரு)
சரணம்✓
ஆறுமுகமுமீ ராறுவிழிகளும்
அம்புயமுங்குலி சாயுதமும்வேலும்
சீறுமயூரமுஞ் சேவலுமால்பெற்ற
செல்வியர் மேவுந்திருக் கோலங்கொண்டருள் (முரு)
சரணம்✓
தந்தையுந் தாயுந் தமருஞ் சகோதரர்
தாமுமித் தாரணி தன்னினீ யேயன்றிச்
சாருந் துணைக்கள்வே றாருமில்லை யெங்கள்
தற்பரனே யோதுஞ் சத்தியமேயிது. (முரு) 16