முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
ஆறுமுகம் பன்னிரு13 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

ஆறுமுகம் பன்னிரு

வெண்பா✓
வேதனரிக் கெட்டா விழுப்பொருளே வல்வினையேன்
வேதனைநோய் நீக்கியருள் வேன்முருகா—பாதமிக
நம்பினருக் கேற்றசுக நல்குந் திருமாவை
யம்பதிவா ழாறுமுக வா.
பல்லவி✓
ஆறுமுகம் பன்னிரு கரமொடு வருநாதா
நூறுமகந் தந்தவ னருள்பெற வருடாதா (ஆறு)
அனுபல்லவி✓
நூறுயுகமு மழியாவசுரரை
நொடியிற்பொரு திமையோர்சிறை
விடுவித்திடு மெனையாடுரை (அறு)
சரணம்✓
அங்கை கூப்பி யடிபணியு மனைவரையும்
அரந்தை மாற்றி யனுதினமு மருள்வோனே
தங்க வேற்படை தாங்கிய கையோனே
தமியேனரை நொடியுந்துயர்
சகியேனிதோ வந்தாளுவை (ஆறு)
சரணம்✓
இறையைவேதத் துட்பொருள் சொல்லென்றோர்வன்
சிறையிலைவைத் தெனைவரையும் படைத்தோனே
மறைகடேடு மாமயில்வாகனா
மகிதலமதில் வருபவமினி
வாராதருள் தாராய்நனி (ஆறு)
சரணம்✓
திங்கள் சூடுஞ் சிவச ரவணோற்பவனே
தினமுமாவைச் சினகர நின்றருள்வோனே
கொங்குண் கோதைக்குஞ் சரிமணாளனே
கொன்றிடுநம னென்றெனதுயிர்
கொண்டாலும துன்றாள்பரம். (ஆறு) 13