முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
நாதாவுன் பொற்பாதம்6 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

நாதாவுன் பொற்பாதம்

வெண்பா✓
அல்லல்போம் வல்வினைபோ மன்னவையிற் றிற்பிறந்த
தொல்லைபோந் தீராத் துயரம்போம்—நல்ல
வளமலியு மாவைநகர் வாழ்சுப்ர மண்யன்
கழலடியைக் கைதொழுதாக் கால்.
பல்லவி✓
நாதாவுன் பொற்பாதம் நம்பினேன்
இந்த நானிலத்தி லாதாவில்
லாமல் மெத்த வாடுகிறேன்
நாதாவுன் பொற்பாதம் நம்பினேன்.
சரணம்✓
ஆதி சிவாகமத் தறிவரும் பொருளே
அடியவர்க் கணுகவொட் டாயகத் திருளே
கோதிவிட் டொளிரும்வேற் றுரையேஎன் குருவே
துதிபுரிவே னானுன் கதியெனக் கருளே (நாதா)
✓
அத்தியற்புதவடி வான வல்லாசா
ஆடுமயி லேறிவிளை யாடு முருகேசா
சித்தமிக வந்தெனை யாட்கொள்ளும் நேசா
தில்லையம் பலத்துளாடுஞ் சிவன்றிருச் சேயா(நாதா)
✓
வானுலகினை யந்த மகபதிக் கீந்தாய்
மாயமா மலையையும் வேறறத் தடிந்தாய்
ஈனவேடுவப் பெண்ணை யினிதென மணந்தாய்
எனையுவந் தருளுமம் பிகைதருங் குழந்தாய் (நாதா)
✓
தாவறுஞ் சரவண வாவியில் வளர்வாய்
சம்ப்ரம மிகுமாவை யம்பதி யுறைவாய்
ஆவிக டோறுநின் றகிலமு மமர்வாய்
அரியயற் கரியவுன் றிருவருள் புரிவாய். (நாதா) 6