முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்1 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்

விருத்தம்✓
வார ணத்தவ னாதியர் வாழுமே
வார ணத்தவு ணப்படை மாளவோர்
வார ணத்தையு யர்த்திய மாவைவாழ்
வார ணத்தடி யானை வழுத்துவாம்.
பல்லவி✓
கந்தஸ்வாமியைச் சிந்தித்துய்வாய் நெஞ்சமே—கோவிற்
கடவைஸ்தல நிதமும்முறை (கந்த)
அனுபல்லவி✓
வந்தடைந்தவர்க்கு வல்வினைமாற்றிடும்
வானாறுமு கம்பன்னிரு கரனாயிரு கண்முன்வரு
(கந்த)
சரணம்✓
மாயப்ரபஞ்சப்பொய் வாழ்விதொன்றுந் நிலையாதே —வீணாய்
மங்கையராசைவ லையிற்சிக்குண்டுலையாதே
தேயமுழுதிற்குந் தேவையாய்முன்னிற்குந்
தெய்வானைமு னோர்பெண்டொரு
தெய்வானைபி னேகொண்டருள் (கந்த)
✓
ஆணவமும்மல முங்கடைத்தேறவிடாது—நாலைந்
தாறொடன்றின்னும ரும்பகையாறக்கூடாது
பூணரவன்பரி பூர்ணசுதன்தெரி
புகல்பெற்றிமை யவராறிய
பகல் வெற்றிகொண் மயிலேறிய (கந்த)
✓
கோரமிக்கஏமன் கொண்டோடிப் போகுமுன்னேறி —ஐயன்
கோலத்தைத்தரிசித்துக் கும்பிட்டிதோசரண்சேறி
துரைத்துரந்தபோர் வீரத்துயர்ந்தவோர்
துரைவேளொயின் மயில்போலொரு
பரைவாழ்கயி லையின்மேல்வரு. (கந்த)
✓
மாதாபிதாஎத்தா தாதருவாரரைக்காணி—வல்லே
மாவையிற்போயேதுந் தேவையோசாமியைக்கேணி
யாதுந்தடைசொல்லார் யாதுந்தரவல்ல
இறையைக்குறு முனிகருடிய
மறையைக்கரு ணைக்கொடருளிய. (கந்த) 1