முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
வேலுமயிலு மேன்25 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

வேலுமயிலு மேன்

கலித்துறை✓
ஆல மயின்ற வரன்சுதன் கூற்ற னனுப்பவருங்
கால னெனையணு காமவெக் காலமுங் காக்குமலர்
மாலை திகழறு மாமுகன் மாய மலைக்குவிட்ட
வேலு மயிலுமுண் டேதமி யேற்கொரு மெய்த்துணையே.
பல்லவி✓
வேலுமயிலு மேன்
மேலுந் துணையல்லால்
வேறுந் துணைகளுண்டோ (வேலு)
சரணம்✓
காலகாலன் பெற்ற கண்மணியே யுற்ற
கடுவினைபொடி படநொடிவரு
கந்தாவுமை மைந்தாவொரு (வேலு)
சரணம்✓
ஆர்கலி யுஞ்சவிண் ணோர்கலி மிஞ்சவெண்
ணறுமசுரர்க ளழிதரவயி
லெறிதருசிவ குருபரகுக (வேலு)
சரணம்✓
முண்டக மேலிருந் தண்டங்களைத் தந்த
மூவாமுழு முதல்வாவறு
முகவாவெகு தயவாய்வரு (வேலு)
சரணம்✓
மூவர்முறைவரு மாவையுறைதரு
முருகாதிரு மருகாகதி
முழக்கப்பவ மாளத்திதி. (வேலு) 25