முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
கண்களிகூரவென் ஸ்வாமி15 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

கண்களிகூரவென் ஸ்வாமி

கலித்துறை✓
விண்ணாடு தீக்கிரை யாக்கிய சூரனை வேல்கொடிதம்
பண்ணாறு மாமுக னைத்திரு மாவைப் பதியமருங்
கண்ணா யிரற்கருட் செய்முரு கையனைக் காணவெனக்
கெண்ணா யிரங்கண் படைத்தில னேயவ் விறையவனே.
பல்லவி✓
கண்களிகூரவென் ஸ்வாமி—யுனை
யெப்போது என்றுரையே
யெப்போது என்குருவே
யெப்போது காண்பே னிப்பூமி.
சரணம்✓
ஒண்கதிரொளிவிடு மொருவடிவேலா
உசிதசரிகமப தநீடராஜா
ஓர்சுதனெனுமுரு கேசாசாமி (கண்)
சரணம்✓
சகிக்கருஞ் சுரர்சிறை தவிர்த்தொ ரனந்தந்
தயித்தியர் பொரவரைச் சணத்தில் வென்றிந்த்ரன்
றன்சுதைதனை மணந்தருள்சாமி (கண்)
சரணம்✓
மங்கல வாத்தியம் மறைநிறை தோத்திரம்
மறுவினை வேத்தியம் மாவையம் க்ஷேத்திரம்
மந்திர முறைந்தெனை யருள்சாமி (கண்)
சரணம்✓
புன்னகை யோடருள் பொழிமுக மாறும்
பன்னிரு கைமயிற் பவனியுலாவும்
இன்னருட் கோலமுமாக சாமி. (கண்) 15