முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
மோக்ஷானந்தத்தை நாடு5 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

மோக்ஷானந்தத்தை நாடு

கலித்துறை✓
கந்தனைக் கந்தக் கடம்பணி வேளைக் கடவுட்கங்கை
மைந்தனைக் கண்ணன் மருகனைக் கார்மயில் வாகனனைச்
சிந்தனைக் குட்டெரி சித்திடத் தேடிநந் தீயவினைப்
பந்தனைக் கட்டறுத் தெந்துயர் தீர்த்தருள் பாலிக்குமே.
பல்லவி✓
மோக்ஷானந்தத்தை நாடு—வேள்
முருகனை நிதந் தேடு ஓ! மனமே
மோக்ஷானந்தத்தை நாடு.
அனுபல்லவி✓
தாக்ஷாயணிதருஞ் சாமியைக்கூடு
சைவ சமயநெறி சார்ந்து றவாடு (மோக்ஷா)
✓
சாலு முலகமிந்த்ர சால மென்றெள்ளு
தனி மயிலூர்பரன் சரணெனக் கொள்ளு
வேலுமயிலுந்துணை வேறெலாந் தள்ளு
மேவுவானேமனப்போ விளையும் வீண்சள்ளு(மோக்ஷா)
✓
சுந்தர நான்மறை சொல்வதே சத்யம்
துவமுறுஞ் சரவண பவனடி நித்யம்
இந்திரனானாலு மென்ன! அநித்யம்
இகபரமுதவுநா யகற்குச் செய்துத்யம் (மோக்ஷா)
✓
கண்டுழிமாயுமின் கடுத்ததித்திரேகம்
கந்தனைக் கொண்டுவினை கடத்தல் விவேகம்
மண்டு பிணியாயுடல் வருத்து மநேகம்
மாவையிலதற்கொரு மருந்துண்டூயூகம் (மோக்ஷா) 5