முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
புள்ளிமயி லேறும்2 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

புள்ளிமயி லேறும்

வெண்பா✓
புள்ளிமயி லேறும் புனிதா விழியுகுற
வள்ளிமண வாளா வடிவேலா—உள்ளமுடன்
எப்பொழுதுங் கைதொழுவே னென்றுயர்தீர்த் தாள்வாயென்
அப்பனே சுப்ரமணி யா.
பல்லவி✓
அப்பனேயென் சுப்ரமண்யா
ஐயனேயெனை யாளுமேசாமி
அனுபல்லவி✓
இப்ரபஞ்சத் தப்பைமுந்தத்
தப்பவையிங் கெப்போதுமவந் (தப்பனே)
சரணம்✓
பந்தப்பாவத் தொந்தத்தாலுட்
பாறியேவே சாறியாறா
வெந்துயர்ப்பட் டெந்தநாளும்
மெத்தவாடி வேகிறேனே (அப்பனே)
✓
கானவேடர் கன்னிகைதெய்
வானைகூடு மன்னவாவுன்
காணவரும் ஞானக்கோலக்
காட்சிதாமீ னாட்சிபாலா (அப்பனே)
✓
வையகமிங் குய்யவேநன்
மாவைகநர்க் கோவின்மேவுஞ்
செய்யமுரு கையனேயுன்
சேவடிதந் தாள்வடிவேல் (அப்பனே) 2