முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
இந்தக் காயத்தை17 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

இந்தக் காயத்தை

கலித்துறை✓
மேவற் புதவடி வேலுங் குலிசமும் வெற்றிமிகுஞ்
சேவற் கொடியும் மயில்வா கனமுந் திகழ்தரநன்
மாவைப் பதியி லெழுந்தருண் மான்மரு காதமியேன்
பாவப் பிணிக்கொரு நீயே மருந்தென்னை பாக்கியமே
பல்லவி✓
இந்தக் காயத்தை யேனுனக்கென் னெஞ்சமே—வேலுக்
கிறைவன்றனை நிதமுந்துதி (இந்த)
அனுபல்லவி✓
கொந்தவிழ் சோலை குலவுநன் மாவையிற்
குடிகொண்டருள் குளகன்றிரு வடிகண்டன வரதந்துதி —(இந்த)
சரணம்✓
பத்திருமாசங்கர்ப் பைக்குள்ளிருக்கும் பொய்க்கூட்டம் —இந்த
பாருற்பவித் திட்டால் நாரிற்சுழல் பொம்ம லாட்டம்
மித்தையெனும்ப்ரபஞ் சத்தைநம்பாதன்பின்
மிகவந்தெனையாளூங்கதிர் வேல்வேலெனநாளுந்துதி —(இந்த)
சரணம்✓
ஐம்புலமார் தருமொன்பது பீற்றற் பைத்தோற்றம்—நம
தாக்கையிற்சுவாச மடங்கிப்போனா லூசனாற்றம்
அம்புவி வாழ்விதொ ரந்தரமின்போலென்
றகநின்றிகபரமுந்தரு மமலன் பதகமலம்பணி (இந்த)
சரணம்✓
கூற்றுவன் வந்துயி ரேற்றிடும் போதோதிண் டாட்டம்—மிகு
கூக்குர லோடுநாய்க் கூட்டநரிக்குக் கொண்டாட்டம்
ஈற்றில்யாதும்பய னில்லைநந்தில்வைவாழ்
இறைவன்சுதனெனையாளறு முகவன்பதநினை நாடோறும்—(இந்த)