முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
ஆரெனக்குத் துணையையா12 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

ஆரெனக்குத் துணையையா

வெண்பா✓
அண்டர்களைக் காய்ந்த வசுரர்கிளை வேறறவேல்
கொண்டுதொலைத் திட்ட குமரவேள்— தொண்டனெனை
வாதைபுரி வல்வினைநோய் மாற்றி யருளவெனக்
காதரவுன் போலொர்துணை யார்.
பல்லவி✓
ஆரெனக்குத் துணையையா—அந்த
அந்தரத்தோர் வந்துபணி
கந்தா நீயல்லாமல் வேறெங் (ஆரென)
அனுபல்லவி✓
மாருதப்ர வல்லியந்த மாவதன் மாறியுய்ந்த
மாவைநகர்க் கோவில் வத்ததேவ வுனைப்போற்றகுந்த (ஆரென)
சரணம்✓
ஆரணங்க ளேத்துதெய்வ வாரணப்பெண் மணாளனே
அந்தரங்கத் தைப்பரனுக் கருளிய தயாளனே
பூருவ வினைதொலைக்கும் புண்யபரி பாலனனே
பொன்மயின்மே லேறுமெங்க டன்மவடி வேலவனே (ஆரென)
✓
ஆண்டவ பொன்னம்பலத்திற் றாண்டவஞ் செய்தருளிய
ஆலமிடற் றையனுக்குப் பாலகாவிவ் வையகத்தில்
பூண்டபவம் போக்கநித வேண்டு தமியேற்குனது
பொற்பதந் தராயேலருட் டற்பரா நானென்ன செய்வேன் (ஆரென)
✓
முன்னோர்நாளிற் கிரவுஞ்சக் கன்மலைக்கீ றெய்தவிட்ட
கொன்னவில்வேற் படையையிங் கின்னமொரு தரத்திலென்
னின்னலென்னு மலைக்குவிட் டென்னைமகிழ் விக்கொணாதா
தன்னிகரில் லாததனிப் பன்னிரு கையனேயினி. (ஆரென) 12