முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
மாமயிலேறிமுன் பாய்வருவாயணி33 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

மாமயிலேறிமுன் பாய்வருவாயணி

வெண்பா✓
வானோர் சிறைமீள மாயமலை யோடவுணச்
சேனையெலா மாளச் செயித்தவடி—வேனாதா
வென்னைநிதந் தற்காத் திரட்சிப்பாய் மாவையினின்
றின்னறவிர்த் தாளீஸ் வரா.
பல்லவி✓
மாமயிலேறிமுன் பாய்வருவாயணி
மாவையிலேயென்றும் வாழ்முருகேசாநீ (மாமயி)
சரணம்✓
தேமொழிவள்ளிதெய் வானைசமேதா
சித்தமிரங்குமே ஜெகநாதா
பூமலர்ப்பாதம் போற்றுவனானிதோர்
பொல்லாநோய்தீர நல்லருட்செய்குவாய் (மாமயி)
சரணம்✓
தொண்டர்கட்குரிய சுகமருட்புரியும்
துய்யனேபன்னிரு கையனே
அண்டருக்கரிய வருட்பெருந்துரையே
அடிபணியுநாயேற் கருட்புரிகுவாயே (மாமயி)
சரணம்✓
மாமறைநூலா மகத்வசெங்கோலா
மகபதிக்கருள்புண்ய வடிவேலா
தாமதமாகா தோர்தமியேற்குன்
றயைகிடைக்கவேணுஞ் சாமியுன்னடைக்கலம்(மாமயி
பாரினிலேதமி யேனுறுமாதுயர்
பாராயோ வினைதீராயோ
காரணனேபரி பூர்ணனேதிருக்
கார்த்திகே யாவுன்னை யேத்துவேனான்வன்ன. (மாமயி) 33