முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்29 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்

வெண்பா✓
ஆரார்க்கும் பொல்லா வருந்தீ வினைநோயால்
றீராத வெத்துயருந் தீருமே—நாரிதரு
மைந்தா மகத்வ வடிவேலா மாவைநகர்க்
கந்தா வெனத்தொழுதக் கால்.
பல்லவி✓
கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்
தந்தாவெனக்கிச்சமயம். (கந்தா)
அனுபல்லவி✓
இந்தார்முடிச்சடை யைந்தானனத்தனுடை
மைந்தாவிண்டா வெயில்சூழூஞ்
சந்தாரும்மாவையில் வாழும் (கந்தா)
சரணம்✓
குன்றுருவ வேல்விடுத்தவா—அசுரர்குலங்
கொன்றுசுரர்க்கூர் கொடுத்தவா
என்றுமுனையென் குறைகொடுதுணையு
மில்லையிக்கார்ந்த மொழிகொடு
குல்லைத்தாரேந்தி யொளிவிடு (கந்தா)
சரணம்✓
புள்ளிமயின் மேனடித்தவா—புல்லியகுற
வள்ளியை மணமுடித்தவா
வெள்ளிமலையுதித்த தெள்ளுமலகுடித்த
வேலாவிலங்கு சதங்கைக்
காலாபொன்னின்குலிசங்கைக் (கந்தா)
சரணம்✓
முன்பயனைச் சிறையிட்டவா—குறையிரந்த
பின்பரனுக் காகவிட்டவா
அன்பொடெமைப் படைத்த வறுமுகவாறடைத்த
ஐயன்முன் பிரணவமருள்முரு
கையன் பன்னிரு கரமொடுவரு. (கந்தா) 29