முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
திருக்கடைக் கண்ணால்7 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

திருக்கடைக் கண்ணால்

கலித்துறை✓
அட்டதிசையும் புகழ்வடி வேன்முரு காவெழில்கூர்
மட்டிமிர் மாலை யசைமணி மார்ப மகிழ்வொடுமா
விட்ட புரங்குடி கொண்டருள் வாயென் மிகுபிணிநோ
யெட்டுணை யுஞ்சகி யேன்றுயர் தீர்த்தெனை ரட்சிக்கவே.
பல்லவி✓
திருக்கடைக் கண்ணால்
பார்த் தெனை யாளுஞ்
சிவசுக்ர மண் யா.
அனுபல்லவி✓
பருப்பதக் கொடியுமை பாலாவுனடியிணைப்
பத்மம் பணியுமெனைப் பாலித்தருளுவாய்நீ (திரு)
சரணம்✓
அறுமுக மிலங்கப்—பன்னிருகைமெத்
தழகாகத் துலங்க
குறுநகையொடு தங்கக் குண்டலங்க டயங்கக்
குலவுமாமயில் வருங் கோலநான் மறவேனுன் (திரு)
✓
அந்தணர் புகழத்—தேவர் மாதவர்
வந்தடி பரவ
எந்தாய் தந்தைபோன்மாவை வந்தாளுன்றனைப் பூவைத்
தேத்து வேனெனைப் பாது காத்திடுவா யெப்போதும்(திரு)
✓
வேதமஞ் சலிக்க—முனிவராசீர்
வாதந்தந் தொலிக்க
ஆதரவொடு வேடர் மாதுகுஞ்சரிகூட
அகிலமுநின்றெனை யாளுஞ்சண்முகனே (திரு)
✓
பண்ணவர் பிழைக்கச்—சூரனாதிய
பகைவரைத் தொலைத்த
எண்ணருஞ் சிறைமீட்ட வுன்னாலென் றுயர்மாற்ற
வேலுமுன் றிருக்கையில் வேலுமொன் றிருக்கையில்(திரு)
✓
சூர்க்கடல் பருக—வேல்விடுத்தவோர்
துய்யமான் மருகா
பார்க்கி லெனதுபாவந் தீர்க்க விதென்னவொரு
பாரமோ வரப்போகத் தூரமோ வுனக்கது (திரு) 7