முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
முத்தி தந்தருள்வாய்18 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

முத்தி தந்தருள்வாய்

கலித்துறை✓
வானுல காண்மக வானதை யாளவு மாயமலை
தானுறு தாவை ரோடற மாளவுந் தந்தவொரு
சானவி யாள்சுதன் மாவையில் வாழ்கந்த சாமியுனை
யானொரு போது மறவே னெனைவந் திரட்சிக்கவே.
பல்லவி✓
முத்தி தந்தருள்வாய்—கந்த
மூர்த்தி யேயுனக்கு நிதந்
தோத்திரஞ் செய்வேனுன்பத (முத்தி)
சரணம்✓
பத்தியுடன் பாவலர்பா டித்துதிக்கு மாவையில்வாழ்
உத்தம மொய்ம்பிரா னுள்ள வத்தாவுன் னாதாரமல்லால்
நித்தமுன் பாதத்தை யன்பாய்த் துத்தியஞ் செய்வேனுக் குன்போல்
இத்தலத் துண்டோ வேறோத வெத்தலத்துக்கும் மோ நாதா (முத்தி)
சரணம்✓
சிற்பரன் கண்ணுதல்வந்த தற்பரா நீயருளாயேல்
இப்புவியி லரைநாழி தப்பியுயிர் வாழ்வதில்லை
அற்புதனே யாறுமுகத் துற்பவநான் மறைதேடு
நற்பொருளே கிரவுஞ்சக் கற்பகவே லெறிவேளே(முத்தி)
சரணம்✓
அஞ்சநடைக் கொஞ்சுகிளிக் குஞ்சரிமணா ளாவுனைத்
தஞ்சமென நாளும்வந்து கெஞ்சுகிறே னானுவந்து
கஞ்சனைச் சிறையில்வைத்த வஞ்சனக் கண்ணுமை பெற்ற
மஞ்சனே குஞ்சரமுகத் தஞ்சுகரற் கிளையோனே(முத்தி)
சரணம்✓
அஞ்சுபுல மாறுமுனிக் கஞ்சிலொன்றின் மறைப்பொருள்
அஞ்சி லொன்றிற் கொடுத்ததாட் கஞ்சாவுனக் கடைக்கலம்
நெஞ்சிற்றயை வைத்துனது செஞ்சரணென்றலை வைத்துச்
சஞ்சித பவங்கடொலைத் தஞ்சலென்றருள்வாயிதம் (முத்தி) 18