முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
வன்னமயி லேறியென்21 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

வன்னமயி லேறியென்

வெண்பா✓
சென்னிகளோ ராறுந் திகழ்விழியீ ராறுமருட்
பன்னிருகை வேலும் படைபிறவும்—மன்னுகுற
மின்னொடுதெய் வானைபுற மேவுதிருக் கோலமொடுன்
வன்னமயி லேறியென்முன் வா.
பல்லவி✓
வன்னமயி லேறியென் முன்னே
வருவாயென் ஸ்வாமி நீயே
யருள்வாயிப்பூமி. (வன்ன)
சரணம்✓
பொன்னொளி காலு முன்னிரு தாளைப்
போற்றுவேன் வேளே
அன்னை தந்தையைப் போலுவந் தென்னை
யருள்வாயென் கோவே—வரந்
தருவாய் கண்பூவே. (வன்ன)
சரணம்✓
பற்றலர்புரம் பாவகற்கிடும்
பரமகுமாரா
வுற்றவர்க்கருள் வெற்றிவேலாயுத
மோங்கிய கையா—யெனக்
குதவிநீசெய்யாய். (வன்ன)
சரணம்✓
பண்ணவர்க்கிடர் பண்ணவுணர்க்குநீ
பாவித்தவேலை
பாவியேன்பவமீது மோர்முறை
பாவிக்கொணாதா—மாவைச்
கோவிற் கணாதா. (வன்ன)
சரணம்✓
துய்யனேகந்த ஸ்வாமியேயுன்றன்
சுக்ரவாரத்தைச்
சொன்முறைதவ றாதனுட்டிக்குந்
தொண்டனைக் காரா—யுறுந்
துயர்களைத் தீராய். (வன்ன) 21