முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
தூவி மயிலின்4 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

தூவி மயிலின்

கலித்துறை✓
சரவணப் பொய்கையின் மூவிரு தாரகைத் தாயர்தருந்
திருமுலைப் பாலுணுஞ் செவ்வேள் பரமன் சிறுவனெமக்
கரண மென்றெந்த வகிலமுந் தந்த வறுமுகவன்
சரண மிரண்டு மறவாதவர்க் கொருதாழ்வில்லையே.
பல்லவி✓
தூவி மயிலின் மீதாருங்—கந்த
ஸ்வாமியைநாளுந் துதித்தன்புகூரும்
தூவி மயிலின் மீதாரும்
அனுபல்லவி✓
தாவுஞ்சூரனைமாளச் சாய்த்தருட்டி றங்கொண்டு
தேவர் விண்ணுலகாளச் செய்குணக்குன்று (தூவி)
சரணம்✓
நாரணன் முதலோர்க்கதீதன்—தொல்லை
நான்மறைகளுந்தேடும் ஞானப்பிரக்கியாதன்
நாரணன் முதலோர்க்கதீதன்
வாரணமுயர்த்தவு தாரணநன்னீதன்
வள்ளி தெய்வானைகூட வாழுஞ்சமேதன் (தூவி)
✓
செந்தினை யிடிக்காசைப் பட்டார்—அன்பர்
தேடிக்கொடுக்கு நைவேத்தியந்தனைத் தட்டார்
செந்தினை யிடிக்காசைப் பட்டார்
பந்தவினை கணீக்க பாரின் மாவையிலுட்கார்
பரமனைப் பூசியுங்கள் பழிவர வொட்டார் (தூவி)
✓
நாளைத் துதிப்போமென்பீர் யாரும்—உங்கள்
நாளைக்கூற்ற னுண்டிதோ நணுகிறான்பாரும்
நாளைத் துதிப்போமென்பீர் யாரும்
வேளைக்கற்புதவடி வேலற் காளாகி நேரும்
விக்கினங்களைத் தீர்த்து மிகுகதி சேரும்.(தூவி) 4