முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
தோகைமயின் மேலேறி28 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

தோகைமயின் மேலேறி

வெண்பா✓
செச்சை யணியுந் திருமார்பா தேடினரை
யச்சமறக் காக்கு மருண்முருகா—முச்சகமுங்
கைகுவிக்கு மாவைநகர்க் கந்தாவென் றீவினையைக்
கொய்கதிர்வேற் கொண்டாள் குகா.
பல்லவி✓
தோகைமயின் மேலேறி வருகுவாய்
கந்தஸ்வாமி யுன்னைத்,
துதிசெய்வேனுக்குன் பதவி தருகுவாய். (தோகை)
அனுபல்லவி✓
மாகமளவுமதில் கொண்மாவைப் பதி
வந்துமகிழ்ந்தரு ளெந்தைசிவசுக
வந்தனமிகத் தந்தனன்பிரம்ம்
வர்த்தக பர்வத பத்தினி மைந்தனே (தோகை)
சரணம்✓
அடியவர்க்கிதங் கொடுக்குமிங்கிதலோலா
அண்டர் வேண்டிப்பணிய
வசுரரைத்தொலைத் தருளலங்கிர்வேலா
முடியுடைத்தடங் கிரிதுளைத்தோனே
மூலகாரண னேகிருபாகர
மூர்த்தியேயருட் கார்த்திகேயநன்
முத்தமிழுத்தம வித்வசிரோன்மணி (தோகை)
சரணம்✓
குறுமுனிக்கருளிய திருமுருகேசா
குறமானைத் தழுவிக்
கொளமுன்னவனைக் கருதிபமயிநேசா
குறைமதிபுனைந் தோன்மகனேபொரு
கூதனைவிண்குடி யேற்றிவைத்தவனு
கூலனேகுண சீலனேவண்ணக்
குன்றுதொறாடுங் குமரகுருபரா (தோகை)
சரணம்✓
மருமலர்வதந் தருள்சரவணபவனே
குல்லைமா லையினறு
மணங்கமழ்ந்தொளி விளங்குநீண் முடியினனே
சரிகமபதநீதரும் நாரதன்
றந்தமகந்தன்னில் வந்ததகருஞ்சு
சாமியேதொட்ட நேமிநீரட்ட
தற்பரநித்ய தயாபரசண்முகா. (தோகை) 28