முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
"அவதார புருடன்" என்றபடி3 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

"அவதார புருடன்" என்றபடி

வெண்பா✓
மேவற் புதவடிவேல் விட்டவுண ரைத்தெறுமோர்
காவற் கடவுட் கருமருகா—மாவைகநர்க்
கந்தா முருகா கடிதிலெனை யாளவுமை
மைந்தா மயிலேறி வா.
பல்லவி✓
மயிலேறி வருவாய்—அயில்
வாச அருணேச முரு
கேசா மயிலேறி வருவாய்
அனுபல்லவி✓
அயனரி முதல மரருமடிதொழ (மயிலேறி)
சரணம்✓
ஆறுமுகமுமழ கானநல்விழிகளு
மபய வரத கரமாக—மிகச்
சீறுமழுவும் வேலுஞ் சேவலு மயிலுமாய்த்
திகழ் திருக்கோலமதாக—மணச்
செல்வியரிரு புறமாக ஒயிலாக—அதிவேக (மயிலேறி)
✓
ஆலைவாய்க் கரும்பாயோ ரலைவாயிற் றுரும்பாய் நா
னலைகிறே னெனைக் கண்ணாற் பாராய்—நாளும்
அஞ்சலி செய்துன்றனைக் கெஞ்சுகிறே னுன்னடிக்
கஞ்சமதை யெனக்குத் தாராய்—சற்றும்
அஞ்சலென்றெனை நிதங்காராய்—தயைகூராய்—துயர்தீர-(மயிலேறி)
✓
மாறுகொண்டி கல்பகை யாறும் வென்றுனதொரு
ஆறுதல் பெறமனதார—திரு
நீறுகண்டிகை புனைந் தாறொரஞ்செழுத்தொடுன்
பேரை அஞ்சலியொடு கூறத்—திரு
மாவையை வலஞ்செய்தீடேறக்—கதியேற—அதிவீர— (மயிலேறி)
சரணம்✓
பாரமிகும் ப்ரபஞ்ச பாதகமர்ந்தமும்
பரிதிமுன் பனியெனவோட—அந்த
காரமடர்ந்த பந்த பாசங்கடினந்தோறும்
கருடன் முன்பணியெனவாட—உந்தன்
பாத பங்கயங்க ணான்சூட—உன்னைத்தேட— துதிபாட—(மயிலேறி) 3