முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
கந்தாவெனை வந்தாடிருக்கோலம்10 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

கந்தாவெனை வந்தாடிருக்கோலம்

வெண்பா✓
ஐயா முருகா வனைத்தும் படைத்தவருட்
கையா கடம்பணியுங் கந்தாவுன்—செய்யதிரு
பாதம் பணிவேனைப் பாதுகாத் துன்னருட்ப்ர
சாதந் தருவாய் சரண்.
பல்லவி✓
கந்தாவெனை வந்தாடிருக்கோலம்
கண்கள்களிக்கநான் காணுவதெக்காலம் (கந்தா)
அனுபல்லவி✓
சந்ததமாவைவ திந்தருளும் முருகையா
தாவுமணிமயில் வாகனமேறித் தயங்குபன் னிருகையா
இந்திரர் வானவ ரேத்தி வணங்கிடும்
ஏகனே மாதுமை பாகனருளிய (கந்தா)
சரணம்✓
அரியயன்கூட வறியொணா ததிதூரம்
அண்டிப் பணிந்திடுந் தொண்டர்க் கென்றால்வந்தங்
கருள்செய்வாய் நொடிநேரம்
சரவசரமுந் தந்ததயாபரா
சார்தமி யேற்குந்நீ தானலோதாபரம் (கந்தா)
✓
சதுர்முகன்மறை விடைகொடான் மயலேறத்
தாக்கிச் சிருஷ்டிதத பாக்யமே யுன்னிழல்
தருகுவா யிளைப்பாற
வதுவைசெய்திடும் வள்ளிபங்காளனே
வந்தவினையறுத் துய்ந்திட வந்தருள் (கந்தா)
✓
அம்பொன் மவுலியுங் குண்டலமு முகமாறும்
ஆறிரு கைகளும் வேலு மயிலுமென்
றடுத்திடிற் பவமாறும்
வெம்பிய சூர்ப்படை வீட்டிய வேற்படை
நம்பியே யுன்னையெந் நாளு மறவேனான். (கந்தா)10