முருகன் App
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள்
சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்
ஆசிதா என்னையாள்வே19 / 36
1சுப்பிரமணியஸ்வாமி வணக்கம்2புள்ளிமயி லேறும்3"அவதார புருடன்" என்றபடி4தூவி மயிலின்5மோக்ஷானந்தத்தை நாடு6நாதாவுன் பொற்பாதம்7திருக்கடைக் கண்ணால்8மாவைநகர்க் கோவில்வாழ்9தஞ்சமாயடிக் கஞ்சந்தந்தா10கந்தாவெனை வந்தாடிருக்கோலம்11மோகலாகிரி என்றபடி12ஆரெனக்குத் துணையையா13ஆறுமுகம் பன்னிரு14மயின்மீதினில் வருவாய்15கண்களிகூரவென் ஸ்வாமி16முருகா வொருபோது17இந்தக் காயத்தை18முத்தி தந்தருள்வாய்19ஆசிதா என்னையாள்வே20கருணைகொண் டென்னைக்21வன்னமயி லேறியென்22ஜியமதறேமீறே என்றபடி23ஏழையைக்கார் கண்பாரையா24சாமியேயிப்போது தந்தருளுன்25வேலுமயிலு மேன்26அரிதிருமருகனின் றிருவடிமறவா27வா ஏறுமயின்மிசை28தோகைமயின் மேலேறி29கந்தாவுனக்கொரபய முன்பாதாரவிந்30சாமியிந்தத் தருணம்வந்துன்31நெஞ்சே நிதந்துதி32கந்தாவிரக்க மில்லையோ33மாமயிலேறிமுன் பாய்வருவாயணி34ஐயாமுரு காவுந்திருவடிக்35அருள்புரிந் தென்னையாளீசா36ஒன்றான மெய்ப்பொருளே
மாவைக் கந்தன் பக்திரசக் கீர்த்தனைகள் · சி. வேலுப்பிள்ளை உபாத்தியாயார்

ஆசிதா என்னையாள்வே

வெண்பா✓
பத்தியுட னாளும் பணிபுரியுந் தொண்டர்களைச்
சித்த மகிழ்ந்தளிக்குஞ் செவ்வேளே—யெத்திசையும்
வாசமிகுஞ் சோலைவளர் மாவைவுறை வாய்தமியேற்
காசியுத வாறுமுக வா.
பல்லவி✓
ஆசிதா என்னையாள்வே லாயுதா
ஆதிநாதா. (ஆசிதா)
சரணம்✓
ஆசிதாவீசா வுருள்புரிவாசா
அன்புசெய்வாய் முருகேசா வதிநேசா (ஆசிதா)
சரணம்✓
வாசப் பூஞ்சோலை மாவைப் பொன்சாலை
வாசஞ் செய்வாய் கந்தவேளே வந்திவ்வேளை(ஆசிதா)
சரணம்✓
ஆலைவாய்க் கரும்பா யலைவாயிற் றுரும்பா
யலைகிறேன் புவியினான் வம்பாய் மனவன்பாய்(ஆசிதா)
சரணம்✓
வல்பிணி நோயால் வாடுகிறே னேயான்
மனமுவந்தருள் புரிவாயே யென்னைநீயே (ஆசிதா)19